19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அஜித்- சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் இணையாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் நசைச்சுவை நடிகர்கள், சங்கர் நடிக்கிறார்கள். மேலும் முதன்மைக் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்க இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், அஜித் துப்பாகி சுடும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. ‘விஸ்வாசம்’ படத்திற்காக தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. படம் முழுக்க அடிதடி துப்பாக்கிச் சண்டைக் கதையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தீபாவளி வெளியீடாக்க படக்குழுவினர் முயன்று வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,715.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



