Show all

ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்

2010-ல் விருதகிரி படத்தில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த் பிறகு அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தியதால் படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது தனது மகன் சண்முக பாண்டியனுடன் இணைந்து தமிழன் என்று சொல் என்கிற படத்தில் நடிக்க உள்ளார். அருண் பொன்னம்பலம் இயக்கும் இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

சகாப்தம் படத்துக்குப் பிறகு சண்முக பாண்டியன் நடிக்கும் 2வது படம் இது. வருகிற ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.