Show all

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் போட்டியாளர் அறிமுக நிகழ்ச்சி! இரவு 8.00 மணிக்குத் தொடங்கி இரவு 12.00 மணி வரை நடந்தது.

விஜய் தெலைக்காட்சியின் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் நேற்று இரவு எட்டு மணிக்குத் தொடங்கி இரவு 12மணி வரை ஒலிபரப்பானது. பிக்பாஸ் வீட்டில் தங்கி இந்த நிகழ்ச்சியை கலக்கவிருக்கும்  15 பிரபலங்கள் அறிமுகம் நான்கு மணி நேரம் தொடர்ந்தது.

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் வீட்டில் தொடங்கி, பிக்பாஸ் வீட்டிற்கு கமலை அழைத்து வருவது போல அமைத்து அசத்தியிருந்தார்கள். ஒவ்வொரு போட்டியாளரையும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பாத்திமாபாபு அரங்கேறினார். தொடர்ந்து ஈழத்துத் தமிழ்ப்பெண்- நிகழ்ச்சி தொகுப்பாளினி- இலொஸ்லியா, சாசி அகர்வால், நடிகை- மதுமிதா, சின்னத்திரை நடிகர் கவின், விளம்பர நடிகை அபிராமி, நடிகர் சரவணன், நடிகை வனிதா, இயக்குநர் சேரன், நடிகை செரின், மோகன் வைத்தியா, ஈழத்தைச் சேர்ந்த தர்சன் தகவல் தொழில்நுட்ப பொறிஞர் தற்போது விளம்பர நடிகர், நடன இயக்குநர் சாண்டி, மலேசியாவைச் சேர்ந்த பாடகர் முகன்ராவ், சின்னத்திரை நடிகை ரேஷ்மா என பதினைந்து பேர்கள் பிக்பாஸ் வீட்டில் கலக்க வந்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,193.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.