Show all

கனிகா கபூர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது! ஹிந்தித் திரையுலக பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும், பல்லோர் பாதிக்க காரணமானதும்

ஹிந்தித் திரையுலக பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும், பல்லோர் பாதிக்க காரணமானதும் வட இந்தியாவை உலுக்கி உள்ளது. படித்துவிட்டு நீங்களும் கோபப்படுவீர்கள்.

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தித் திரையுலக பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது வட இந்தியாவை உலுக்கி உள்ளது. காரணம்:- கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பாலிவுட் பாடகி கனிகா கபூர் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள், வடஇந்திய பேரறிமுகங்களுடன் நெருக்கமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதேயாகும்.

கனிகா கபூருக்கு கொரோனா என்பது தற்போது சர்ச்சையாகி வரும் நிலையில்- அவர் இந்தியாவிற்கு கொரோனா கொண்டுவந்த பாதையை பின் வரும் வகையில் சுருக்கமாக விளக்கலாம். 

மார்ச் 9 கனிகா கபூர் இலண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். அப்போதே இவருக்கு கொரோனா இருந்துள்ளது. (இவர் எப்படி கொரோனா பரிசோதனைக்கு உள்ளாகாமல் போனார். வடஇந்தியாவில் கெரோனா பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை பரிசோதனை இவ்வளவுதானா? என்று அமெரிக்க அதிபர் சீனாவின் மீது கோபிக்கிற கோபம், வடஇந்திய நலங்குத்;துறை மீது நமக்கும் வருவது நியாயமே.)
மார்ச் 11 கனிகா கபூர் லக்னோ சென்றுள்ளார்.
மார்ச் 13,14,15 நாட்களில் இவர் இலக்னோவில் விருந்துகளில் கலந்து கொண்டுள்ளார். 
இதில் மார்ச் 14 அன்று கலந்து கொண்ட விருந்தில்தான் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் உடன் இருந்துள்ளனர். 
மார்ச் 16 கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இலண்டனில் இருந்து இந்தியா வந்த கனிகா கபூருக்கு மார்ச் 16ல் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன் கனிகா கபூர் கலந்து கொண்ட பல்வேறு விருந்துகளில் நடுவண் பாஜக தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

இந்த நிலையில் ஹிந்தித் திரையுலகப் பாடகி கனிகா கபூர் மும்பை விமான நிலையத்தில் கொரோனா சோதனையில் இருந்து தப்பியது எப்படி என்ற விவரம் தெரிந்து விட்டது.

கடந்த மார்ச் மாதம் 9 அன்று இவர் இலண்டனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளார். அங்கு அப்போது கொரோனா சோதனை செய்யப்பட்டது. ஆனால் இதை தவிர்க்க வேண்டும் என்று கனிகா கபூர் திட்டமிட்டுள்ளார். இதனால் நேரடியாக போய் கழிப்பறையில் ஒளிந்துகொண்டுள்ளார்.

மக்கள் எல்லாம் போன பின் அங்கிருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் மக்கள் கூட்டம் அங்கு குறைந்த போதும் கூட, தொடர்ந்து கொரோனா சோதனைகள் நடந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்தச் சோதனையை தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் காசு கொடுத்துவிட்டு வேறு வழியாக வெளியே சென்றுள்ளார்.

அங்கிருந்து வெளியே சென்றவர் பின் மும்பையில் சுற்றிவிட்டு 3 நாட்கள் கழித்து ஏர் இந்தியா விமானம் மூலம் மார்ச் 11ம் தேதி லக்னோ சென்றுள்ளார். மும்பையிலிருந்து லக்னோ பயணம் உள்ளூர் பயணமாம். இந்த பயணம் எதிலும் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்படவில்லையாம். இதனால் கொரோனா இருந்தும் கூட பல இடங்களுக்கு பயணம் செய்தும், கனிகா கபூர் யாரிடமும் சிக்காமல் தப்பித்து இருக்கிறார்.

மார்ச் 16 அன்றுதான் இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட தொடங்கி இருக்கிறது. லக்னோவில் உள்ள கேஜிஎம்யு  மருத்துவமனையில் இவருக்கு சோதனை நடந்து தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கனிகா கபூர் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 269, 270, 188 ஆகிய நோயை பரப்புதல், மக்கள் உயிருக்கு ஊறுவிளைவித்தல், அரசு விதிகளை மீறி மக்களை தொந்தரவு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கனிகா கபூர் கலந்து கொண்ட விருந்துகளில் மொத்தம் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். இரண்டாது விருந்தில் 35 பேர் இருந்துள்ளனர். இதில் பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன துஷ்யந்த், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுபிரியா பட்டேல் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்கள் எல்லாம் தற்போது தனியாக வீட்டில் இருக்கிறார்கள். 

மேலும் இவர் கலந்து கொண்ட விருந்துகளில் நடுவண் பாஜக அமைச்சர்கள் ராஜ்வர்தன் ரத்தோர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மதுரா ஹேமா மாலினி, நடுவண் அமைச்சர் அர்ஜுன் ராம், காங்கிரஸ் மூத்த உறுப்பினர் குமாரி செல்ஜா, குத்துசண்டை வீரர் மேரி கோம் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். 

அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த உறுப்பினர் சஞ்சய் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் திபேந்தர் ஹ_டா, ஜிதின் பிரசதா ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மூவரும் தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். 

இன்னொரு பக்கம் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் இரண்டு நாட்களுக்கு முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். இதனால் சந்தேகத்தின் பெயரில் குடியரசுத் தலைவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு இன்னும் வெளியாகவில்லை. இவரின் அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்காக தீவிர சோதனை நடந்து வருகிறது. 

துஷ்யந்த் சிங் கனிகாவை சந்தித்துவிட்டு, அதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஸ்மிரிதி இராணி, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துள்ளார். 

அதேபோல் துஷ்யந்த் சிங் தொடர்வண்டித்துறை, போக்குவரத்துறை துறை அதிகாரிங்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். இதில் பல ஆட்சிப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் துஷ்யந்த் பாஜகவின் வருண் காந்தி, தீபக் ஹ_டா ஆகியோரை 15 அன்று சந்தித்துள்ளார். 

கனிகா கபூரை சந்தித்த பாஜக உத்தர பிரதேச அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் அதன்பின் உத்தர பிரதேசத்தில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அதில் இவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் கேசவ் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோரை சந்தித்து இருக்கிறார். 

14ம் தேதி நடந்த விழாவில் கிரிக்கெட் வீரர் ஒருவரும், ஹிந்தித் திரையுலக பேரறிமுகங்கள் சிலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் முழுக்க முழுக்க பேரறிமுகங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் பல பேரறிமுகங்கள் நடுவே தற்போது கொரோனா கபூர் அச்சம் எழுந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.