பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர் வனிதாவுக்கும், விவாகரத்தான கணவர் ஆனந்த்ராசுக்குமான மகளை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு வனிதா- பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் என அவருடைய முன்னால் கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்து, காவலரை தன்னுடனே சென்னைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் வனிதா கைது உறுதி என்பதாகவும் தகவல் பரவி வந்தது. 18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகளை கடத்தியதாக முன்னால் கணவரால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வனிதாவை, பிக்பாஸ் அரங்கிற்குள்ளேயே நுழைந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். வனிதா கடந்த பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சிறிகரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து, ஆகாஷை விவாகரத்து செய்துவிட்டு, தொழிலதிபரான ஆனந்தராஜ் என்பவரை கடந்த பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெயந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில், வனிதா மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு ஆனந்தராஜூடன் தான் ஜெயந்திகா வசித்து வருகிறார். இவர்கள் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். அப்படியிருக்கும் போது வனிதா ஜெயந்திகாவை சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார். அதன்பிறகு தான், பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கிறார். இதையடுத்து, தனது மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா காவல் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். ஆனந்தராஜ் கொடுத்த புகாரைத் தொடர்ந்து வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்க, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா இருப்பதை அறிந்த ஆனந்த்ராஜூ, காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகிலுள்ள நசரத்பேட்டை பகுதியில் பிவிஆர் பிலிம்சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் 3 வீட்டுக்கு, நசரத்பேட்டை காவல்துறை உதவியுடன் தெலங்கானா காவல்துறையினர் விரைந்தனர். இதைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணி முதல் வனிதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். வனிதா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இந்நிலையில், வனிதாவின் மகள் ஜெயந்திகாவிடம் மகளிர் உரிமை ஆணைய துணைத் தலைவர் வசுந்தரா இன்று மாலை வாக்குமூலம் பெற்றார். அதில், தாய் வனிதாவுடன் செல்ல விரும்புவதாக ஜெயந்திகா வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்;துறையினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கைது நடவடிக்கையில் இருந்து வனிதா தப்பியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,202.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



