நடிகை வனிதாவின் திருமண ஆசை, அவரை மீண்டும் பழைய போராட்ட வனிதாவாக களத்திற்கு அழைத்திருக்கிறது. 15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருமண வாழ்க்கையில் இரண்டு முறை பாதித்தவர் நடிகை வனிதா. இரண்டு குழந்தைகள் வெவ்வேறு இடங்களில், பெற்றோர்களுடன் சொத்து சண்டை, இப்படி மன உளைச்சலிலேயே போராடிக் கொண்டிருந்த வனிதாவிற்கு திருப்பு முனையாக அமைந்ததுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்ட கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழால், தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார். பெரிதும் வரவேற்பு பெற்ற ஒரு கோளாளிகளுடனான சமையல் நிகழ்ச்சியில் சிறப்பாக அவரும் வரவேற்பு பெற்றார். இந்த நிலையில் அவரின் திருமண ஆசை அவரை மீண்டும் பழைய போராட்ட வனிதாவாக களத்திற்கு அழைத்திருக்கிறது. நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. நடிகர் விஜய் நடித்த சந்திரலேகா எனும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். வனிதா நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து இரண்டாவதாக ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரையும் விவாகரத்து செய்தார். வனிதாவின் மகன் ஆகாசுடன் வளர்ந்து வருகிறார். மகள் வனிதாவுடன் இருக்கிறார். இந்நிலையில் இரண்டு கணவர்களையும் பிரிந்து தனியாக மகளுடன் வசித்து வந்த வனிதா தற்போது மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை முந்தாநாள் திருமணம் செய்து கொண்டார். மூன்றாவது கணவர் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து எலிசபெத் ஹெலன் என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவர் பீட்டர் பால் நடிகை வனிதாவை திருமணம் செய்யும் வரை காத்திருந்த எலிசபெத், பீட்டர் மீது வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில், ‘பீட்டருக்கு ஏற்கனவே என்னுடன் திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக 7 ஆண்டுகள் தனித்து வாழ்ந்து வருகிறோம். முறையாக விவாகரத்து அளிக்காமல் பீட்டர் பால் வேறொரு பெண்ணை (வனிதா) திருமணம் செய்துள்ளார். எனவே சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என எலிசபெத் ஹெலன் புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின்படி போலீசார் வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடந்து இரண்டாவது நாளில் மூன்றாவது கணவர் மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்த நிகழ்வு தமிழ்த் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் வாழ்க்கையிலும் இனி பரபரப்புதான்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



