Show all

வடிவேலு கலக்கல்! அவருக்கே உரிய தனிப்பாணியில் கொரோனா அறிவுரை

“வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்” கலக்கல் கொரோனா அறிவுரையைக் கீச்சுக் காணொளியில் வெளியிட்டுள்ளார் வடிவேலு.

16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் என்று கூறி கொரோனா அறிவுரை வழங்கியிருக்கிறார்.

உலகம் முழுவதும் கொரோனா நுண்ணுயிரி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தொடர்ந்து காணொளிகளைத் தனது கீச்சுப் பக்கத்தில் வடிவேலு பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது கீச்சுப் பக்கத்தில் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள, இந்த வீட்டை தாண்டி நீயும் வர கூடாது, நானும் வர மாட்டேன், அது கோடு, இது ரோடு என வழக்கம் போல தனது பாணியில் சிறப்பாக பேசி நடித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.