Show all

'அகவை முதிர்ந்தவர்கள் மட்டும் பார்க்கலாம் ஆனாலும் அனைவரும் பார்க்கலாம்' சான்றிதழ்! யோகி பாபு 'பட்டிபுலம்' படத்திற்கு

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதைத்தலைவனாக நடித்துள்ள 'பட்டிபுலம்' படத்திற்கு தணிக்கை குழுவினர், 'அகவை முதிர்ந்தவர்கள் மட்டும் பார்க்கலாம் ஆனாலும் அனைவரும் பார்க்கலாம்' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவையில் கலக்கி வந்த நடிகர்கள் வடிவேலு, விவேக்கை அடுத்து தற்போது யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் கதைத்தலைவனாக நடித்துள்ள 'பட்டி புலம்' படத்தை சுரேஷ் என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு வல்லவன் இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்த படம் இம்மாதம் வெளியாகவிருப்பதாக படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர். 

இந்தப் படத்தில் வீரசமர், அமிதா ஆகிய இருவரும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் படக்குழுவினர் வணிக நோக்கம் கருதி இந்த படத்தின் கதைத்தலைவன் யோகிபாபுவையே முன்வைத்து விளம்பரம் செய்துவருகின்றனர். எனவே யோகிபாபு கதைத்தலைவனாக நடித்து வெளிவரும் முதல் படம் இதுதான் என்று கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,087.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.