நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மனைவி மீது, ஜே.கே.ரித்தீஷ் தனக்கு பாக்கி வைத்திருந்த தொகையை தர மறுப்பதாக விட்டில் வேலை செய்து வந்த கேசவன் காவல்துறையில் புகார் 04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகரும், அரசியல்வாதியுமான ஜேகே ரித்தீஷ் கடந்த மாதம் தேர்தல் கருத்துப்பரப்புதலுக்குச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜேகே ரித்தீஷ்; உயிருடன் இருந்த போது, தங்கள் வீட்டில் வேலை செய்து வந்த கேசவன் என்பவர், தனது இல்லத்தின் ஒரு பகுதியில் வாடகையில்லாமல் குடும்பத்தோடு குடியிருந்து வர அனுமதித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜேகே ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி, கேசவனுக்கு தொடர்ந்து வேலையளிக்க இயலாத நிலையில், அவரை தனது வீட்டை காலி செய்து தருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் கேசவனோ, ஜேகே ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி, தன்னை ஆபாசமாக பேசியும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும், சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ஜேகே ரித்தீஷிடம் பணியாற்றி வருகிறேன். அவருக்கு சொந்தமான வீட்டில், தன்னையும், தனது குடும்பத்தினரையும் தங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டார். இதற்காக அவரிடம் நான் பணி செய்வதற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை. அப்படியிருக்கும் போது, அவருடைய மனைவி ஜோதீஸ்வரி வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்துகிறார். அடியாட்களைக் கொண்டு மிரட்டுகிறார். மேலும், தனக்கு வர வேண்டிய ரூ.4 லட்சம் பணத்தையும் தர மறுக்கிறார். இவரைப் போன்று தயாரிப்பாளரான ஐசரி கணேசும், ஜோதீஸ்வரியிடம் வீட்டை கொடுத்துவிட்டு வெளியேறுமாறு தொலைபேசியில் மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார். கேசவன் கொடுத்த புகாரைத் தொடர்ந்து போலீசார் ஜேகே ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையிலேயே பாதிக்கப் பட்டவர் கேசவன்தானா? அல்லது கேசவன், ஜேகே ரித்தீஷின் வீட்டை காலி செய்து தருவதற்கு ஈடாக ரூ.4 லட்சம் கேட்பதற்கான முயற்சியா, இந்தப் புகார்? என்று விசாரணையில் தெரியவரும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,156.
இச்சம்பவம் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.