Show all

பக்ரீத் விழா பெயரிலும் படம் வெளியிடும் தமிழ்த்திரை! பொங்கலோ பொங்கல், ஆடிப்பெருக்கு, தீபாவளியைத் தொடர்ந்து

பொங்கலோ பொங்கல், ஆடிப்பெருக்கு, தீபாவளியைத் தொடர்ந்து, பக்ரீத் விழா பெயரிலும் படம் வெளியிடும் பெருமைக்குரியது தமிழ்த்திரை. இமான் இசையில், பக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் தீயாகி வருகிறது.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பொங்கலோ பொங்கல், ஆடிப்பெருக்கு, தீபாவளி, என்று விழாக்களின் பெயரில் படம் வெளியிட்ட தமிழ்த் திரையுலகம் தற்போது பக்ரீத் விழாவின் பெயரில் ஒரு படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறது.

எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் 'பக்ரீத்' படத்தின் பாடல்கள் இன்று வெளியானது.

இப்படத்தில் விக்ராந்த்துக்கு கதைத்தலைவியாக வசுந்தரா நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டி, விளம்பரம், ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. 

இந்நிலையில், இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியானது.
ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,156.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.