02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை என்ற பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், சுப்பரமணிய சாமிக்கு உதறல் எடுக்கத் தொடங்கி விட்டது என்கிறார் திருச்சி வேலுச்சாமி அவர்கள். ஏன் அப்படி சுப்பரமணிய சாமிக்கு உதறல் எடுக்கத் தொடங்கி விடுகிறது என்பதை-கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களின் இந்த மடலைப் படித்தால் புரியும். 'ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்' என்ற இந்தப் புத்தகத்தை ஏதேனும் கடையில் பார்த்தாலோ.. அல்லது பழைய புத்தக கடையில் கிடந்தாலோ கூட ஒரு நொடி கூட தாமதிக்காமல் வாங்கி விடுங்கள். ஏனெனில் தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணம் அது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அரசியல் அதிகாரத்திற்காக திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு அந்தப் பலியை தமிழினத்தின் மீது போட்டு பெரும் இனப்படுகொலையை செய்து முடித்ததற்கு பின் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்துகிறது. அந்தப் படுகொலை செய்த சூத்திரதாரி யார்.. என்ன பின்புலம் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டுமானால் நீங்கள் பத்திரிகையாளர் ஏகலைவன் எழுத்தில் உருவான இந்தப் புத்தகத்தை படித்தே ஆக வேண்டும். (கூடவே நளினி பிரியங்கா சந்திப்பு புத்தகத்தையும் படித்துவிடுங்கள்..) ஒருநாள் இரவு பதினொரு மணிக்கு இந்தப் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.. அதிகாலை மூன்று மணி வரை கடைசி பக்கத்தை படித்து முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை.. ஒவ்வொரு அத்தியாயமும் நம்மை அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது. நாம் ஒரு பார்வையாளனாக அந்த இடத்தில் நிற்பதுபோல் எழுத்துநடை நம்மை கட்டிப்போடுகிறது. வேலுசாமி அவர்களின் துணிச்சல் நினைக்க நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது. நாம காமெடி பீஸாக நினைக்கும் சு.சாமி எப்படிப்பட்ட சதிகாரர்.. என்பதை அந்த காலகட்டத்திலே அம்பலப்படுத்தி கூட்டம் போட்டு பேசியிருக்கிறார். அவர் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் பதவி சுகத்திற்காகவும் பணத்திற்காகவும் விலை போயிருப்பார்கள். அது எல்லாவற்றையும் விட உயிர் பயம்.. ஏனெனில் அவர் கை வைத்த இடம் அப்படிப்பட்டது. இப்போதும் அவருக்கு வருத்தம் என்னவென்றால்.. சதிகாரர்கள் வெளியில் இருக்க, கால் நூற்றாண்டை கடந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகள் விடுதலையாக முடியவில்லையே என்பதுதான்.. வேலுசாமி அவர்களுடன் ஏற்கனவே அறிமுகம் உண்டு.. அப்போதெல்லாம் அவரை ஒரு காங்கிரஸ்காரராக மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன். ஆனால் இந்தப் புத்தகத்தை படித்து முடித்தப்பிறகு அவர் மீது பெரும் மரியாதை வந்துவிட்டது. தமிழர்கள் கொண்டாடியிருக்க வேண்டிய.. கொண்டாட வேண்டிய ஒரு முக்கியமான நபர் வேலுசாமி. உதறல் எடுத்த சுப்ரமணியன் சுவாமி எப்படியாவது பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையைக் கெடுத்து விட வேண்டும் என்ற நோக்கில், பொட்டு அம்மன் இத்தாலியில் உயிரோடு இருக்கிறார் என்று கீச்சு வெளியிட்டிருப்பது, திருச்சி வேலுச்சாமியின் குற்றச்சாட்டை வலுபடுத்துவதாக உள்ளதாக இணையத்தில் பதிவுகள் போடப் பட்டு வருகின்றன. பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்பட்டவர். இலங்கை உள்நாட்டு போரின் போது விடுதலை புலிகளின் தலையாய தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும், அதில் பொட்டு அம்மனும் ஒருவர் என்றது இலங்கை ராணுவம். இறுதிப்போரின் போது அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், கப்பற்படை தளபதி சூசை, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி போன்ற முதன்மையானவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என அறிவித்த இலங்கை ராணுவம் அதற்கு சாட்சியாக அவர்களின் உடலையும் காட்டியது. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதற்கு சாட்சியாக கூட உடல் ஒன்றின் காணெளிக் காட்சிகளை வெளியிட்டது இலங்கை ராணுவம். ஆனால் இன்று வரை இலங்கை அரசால் பொட்டு அம்மன் இறந்து விட்டார் என்பதற்கான எந்த வித ஆதாரங்களையும் சமர்பிக்க முடியவில்லை. அதற்காக இலங்கை அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, பொட்டு அம்மான் தலைமையில் மீண்டும் விடுதலை புலிகளின் உளவுப் பிரிவு இயங்கிவருகிறது என எச்சரிக்கை விடுத்து, தேடப்படுவோர் பட்டியலில் பொட்டு அம்மானின் பெயரையும் சேர்த்தது இண்டர்போல். ஆனால் அப்போதும் பொட்டு அம்மான் இறந்து விட்டதாகவே சாதித்தது இலங்கை அரசு. இத்தாலியில் உயிரோடு இருக்கிறார் பொட்டு அம்மான் என்ற தகவலை ஏதோ தானே கண்டு பிடித்தது போல வெளியிட்டு இருக்கிறார் சுப்பரமணியன் சாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் பத்திரமாக இருப்பதாக எட்டு ஆண்டுகளுக்கு முன்னமே சென்னையில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் பேட்டி ஒன்றில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். ஈழ இறுதி யுத்தம் முடிந்தது முதல் பொட்டு அம்மான் உயிரோடுதான் இருக்கிறார் என பல முறை செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. ராஜிவ் கொலையில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ள ஏழு பேரும், விடுதலையாகி விடக் கூடாது என்பதிலே ஒரு சதி பல ஆண்டுகளாக திட்டமிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சதியின் பிதாமகன் தான் சுப்பரமணியசாமி என்று திருச்சி வேலுச்சாமியும் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார். அந்த ஏழு பேரும் விடுதலையானால் அப்பாவிகளை மாட்டிவிட்டு அதிரடியாக முடிக்கப் பட்ட ராஜிவ் கொலை வழக்கு மீண்டும் உயிர்த்தெழுந்தால் உண்மைக் குற்றவாளிகள் பிடிபடக்கூடும் என்ற பயம் ராஜிவ் கொலைச் சதியின் பிதாமகன் சுப்பரமணியசாமிக்கு. பொட்டு அம்மான் உயிரோடு இருந்தாலும், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும் வரும் போது வரட்டும்; கொண்டாடலாம்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,820
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



