06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச். இராஜாவால் மானோ ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கனிமொழி புகார் கொடுத்தால் காவல்துறை உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் குற்றவியல், வழக்கு, அவதூறு வழக்குகளையும் போட முடியும் என்றும் ஜெயக்குமார் கனிமொழிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். ஆனாலும், கனிமொழிக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவளிப்பதாக செய்தி போட்டுவிடாதீர்கள் என்று, நிருபர்களிடம் பதறினார் அமைச்சர் ஜெயக்குமார். எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்ணை தவறாக பேசக்கூடாது என எச் ராஜா கீச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, அவரது துணைவியார் ராஜாத்தியம்மாள் மற்றும் அவர்களின் மகளும் திமுக மேலவை உறுப்பினரான கனிமொழி ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் எச் ராஜா கீச்சு ஒன்றை பதிவிட்டிருந்தார். எச் ராஜாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எச் ராஜாவை கண்டித்து திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் எச் ராஜா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எச்.ராஜா-திமுக நடுவேயான பிரச்சினை இது என்று கூறிய ஜெயக்குமார், எந்தக் கட்சியாக இருந்தாலும் எந்த பெண்ணையும் தப்பாக பேச கூடாது என்றும்; தெரிவித்தார். பெண்மைக்கு இழிவு ஏற்படும் வகையில் எந்த சொல்லும், யாரும் கூறக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,762.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



