Show all

இந்திய அழகியாக தேர்வான தமிழ்ப்பெண் அனுகிருத்தி- படத்தில் நடிக்கிறார்! நடிகர் பிரசாந்த்துக்கு கதைத்தலைவியாக

அழகிப் போட்டி நடிகைகளுடன் நடித்து சாதனை படைத்து வரும் பிரசாந்த், தற்போது இந்திய அழகியாக தேர்வான தமிழ்ப்பெண் அனுகிருத்தியுடன் படத்தில் நடிக்கிறார்

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய அழகியாக தேர்வான தமிழ்ப்பெண் அனுகிருத்தி: 'தமிழ், தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் குறித்து புகழாரம்.' என்று இணையத்தில் தலைப்பானார் நாளது 17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 அன்று (01.07.2018).

அவர் தற்போது ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவாகும் 'சேலஞ்ஜ்' படத்தில் பிரசாந்த் கதைத்தலைவியாக நடித்து வருகிறார். 

பிரசாந்த் அழகிப் போட்டியில் வென்ற கதைத்தலைவிகள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராயுடன் ஜீன்ஸ் படத்தில் இணைந்து நடித்தார். இந்திய அழகி பட்டம் வென்ற இசா கோபிகருடன் காதல் கவிதை படத்தில் நடித்தார். பொன்னர் சங்கர் படத்தில், இந்திய அழகிப் போட்டியில் கலந்துகொண்ட திவ்யா பரமேஸ்வரனும், உலக அழகி உட்பட பல பட்டங்களை வென்ற பூஜா சோப்ராவுடனும் பிரசாந் இணைந்து நடித்துள்ளார். 

தற்போது பிரசாந்த் கடந்த ஆண்டு இந்திய அழகி பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அனு கீருத்தியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் பூமிகா பிரசாந்தின் சகோதரியாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ் பகைவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நரேன், நாசர், ஜெயசுதா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரசாந்த் ஏற்கெனவே ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சாக்லேட் படத்தில் நடித்துள்ளார். 

பிரசாந்தின் பிறந்தநாளான நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. சென்னை, தென்காசி, தூத்துக்குடி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. '

முன்பின் தெரியாத கதைத்தலைவனுக்கும், பகைவனுக்;கும் இடையேயான மோதலில், இருவரும் சவால் விட்டுக் கொள்கிறார்கள். வெற்றி யாருக்கு? என்பதே 'சேலஞ்ஜ்' படத்தின் கதை என்கிறார், இயக்குநர் ஏ.வெங்கடேஷ். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,115.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.