Show all

தாமரை மலரும்; மலராது! சீமானின் கருத்துப்பரப்புதல்- கவிதையாக

தமிழகத்தில் பாஜக காலூன்றுவது, தமிழினத்தை மீள முடியாத படுகுழியில் தள்ளிவிடும் ஆபத்து! என்பதே சீமானின் கருத்துப்பரப்புதலில் அடிப்படைக் கருத்தாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 40 தொகுதிகளில் சரிபகுதி பெண்வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
அவர்களுக்காக தமிழகம் முழுவதும் சென்று சூறாவளிப் கருத்துப்பரப்புதல் செய்து வருகிறார் சீமான்.
தூத்துக்குடியில் நாம் தமிழர் சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் என்னும் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார் சீமான்.
அப்போது பேசிய அவர், 'தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழன் கண்ணீரில் ஒருபோதும் மலராது. குளத்தில் வேண்டுமானால் தாமரை மலரலாம்; தமிழன் நிலத்தில் தாமரை ஒருபோதும் மலராது. சேற்றில் தாமரை மலரலாம் தமிழின வரலாற்றில் ஒரு போதும் தாமரை மலராது. என் அம்மா சொல்வார். நம் தமிழர்கள் உடம்பில் படர்தாமரை வேண்டுமானால் மலரும்; பாரதிய ஜனதா தாமரை மலராது' என்று பேசி அசத்தினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,115.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.