Show all

தமிழ்த் திரையுலகினர்களுக்கு கதைப் பஞ்சத்தைப் போக்கியுள்ளது! தமிழக மற்றும் நடுவண் அரசியல்

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் மற்றும் நடுவண் அரசியல். தமிழ்த் திரையுலகினர்களுக்கு கதைப் பஞ்சத்தைப் போக்கியுள்ளது. 

செயலலிதா இருந்த வரை படத்தில், அரசியல் வந்தால் கதை கந்தல்தான்! எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் படம் வெளிவருவது பெரும் சிக்கல்தான்.

தமிழ் திரையுலகில் இருந்து பல நடிகர்கள் அரசியலில் நுழைந்து வரும் நிலையில், அரசியல் படங்களும் வரிசைக்கட்டி இருக்கின்றன. 

தமிழ் திரையைக் கலக்க அரசியல் நையாண்டி படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன.

(!) கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் 'புகழேந்தி எனும் நான்' படம் அரசியல் நையாண்டி படமாக உருவாகிறது. 

(!) விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கிவரும் படத்தில் நடப்பு அரசியல் சூழலை பிரதிபலிக்கும் விதமாக அதிகாரத்திற்காக சண்டை போடும் இரண்டு அரசியல்வாதி கதாபாத்திரங்கள் இருக்கின்றன.

(!) காலா படத்தில் ரஜினியும் அரசியல் பேசியுள்ளார். 

(!) இந்தியன்-2 படத்தில் கமல் அரசியல்வாதியாக நடிக்கிறார். 

(!) சூர்யா நடிக்கும் என்.ஜி.கே படம் அரசியல் படம் என்பது சுவரொட்டியிலேயே தெரிகிறது.

(!) 'தமிழப்;படம்2' பட விளம்பரத்தில் தர்ம யுத்தத்தை கிண்டல் செய்திருந்தார்கள். 

(!) சத்யராஜ் நடிக்கும் 'சினிமா நடிகனும் அரசியல்வாதியும்' டி.ராஜேந்தர் இயக்கி நடிக்கும் படம், 

(!) ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் எல்கேஜி, 

(!) அட்டகத்தி தினேஷ் நடிக்கும் அண்ணனுக்கு ஜே, 

(!) அமீர் நடிக்கும் எம்ஜிஆர் 

(!) பாண்டியன், வைபவ் நடிக்கும் ஆர்.கே. நகர் என அரசியலை கிண்டல் பண்ணும் கதைகளை கொண்ட படங்கள் தமிழ்த் திரையுலகில் வரிசை கட்டத் தொடங்கியுள்ளன.

கற்பனையை மிஞ்சும் வகையில் அரசியலில் பரபரப்பான சம்பவங்களும், சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடப்பதால் இயக்குனர்களுக்கு அதில் இருந்து கதை உருவாக்குவது எளிதாக இருக்கிறது என்கிறார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,799. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.