நடிகை சிறிதேவி தான் இறந்த பிறகும் கூட தனது கடைசி படமான மாம் படத்தின் மூலம் ரூ11.47 கோடியை வசூல் செய்து கொடுத்துள்ளார் செத்தும் கொடுத்த சீதக்காதி போல. இது குறித்து சிறிதேவியின் கணவர் போனி கபூர், 'சிறிதேவி எங்கும் செல்லவில்லை. நம்மோடுதான் இருக்கிறார்' என்று நெகிழ்ந்துள்ளார். 29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் சிவகாசியில் பிறந்த நடிகை சிறிதேவி, தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என பல மொழிப்படங்களிலும் நடித்ததோடு, ஹிந்தி திரையுலகிலும் கொடிகட்டி பறந்தவர். இந்த நிலையில் கடந்தாண்டு துபாயில் உயிரிழந்தார். இவர் கடைசியாக மாம் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. இந்த நிலையில் 'மாம்' திரைப்படம் சீனாவில் வெளியாகி ரூ.11.47 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,150.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.