Show all

சோகத்திற்கு ஆறுதல் தேடிய சிம்பு! ரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி தெருதெருவாக ஒட்டி

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனாம்பேட்டையில் ஒரு குடிசைப்பகுதியை சேர்ந்தவர் மதன். நட்சத்திர உணவகம் ஒன்றில் பாடகராக பணியாற்றி வந்த மதன் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர். சிம்பு ரசிகர் மன்றத்திலும் பொறுப்பில் இருந்துள்ளார். கடந்த கிழமை ஒரு திருமணத்துக்காக பதாகை வைக்கும்போது அந்த பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கும், மதனுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் மதன் வெட்டி கொல்லப்பட்டார்.

மதன் கொல்லப்பட்ட செய்தி துபாயில் செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பில் இருந்த சிம்புவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே தனது தந்தை டி.ராஜேந்தரை அனுப்பி மதன் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூற வைத்தார்.

படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பிய சிம்பு நேற்று இரவு தனது ரசிகனின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை தேனாம்பேட்டை பகுதியில் ஒட்டினார். சிம்பு சுவரொட்டி ஒட்டும் படம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,793. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.