Show all

மெரினாவில் நினைவேந்தல் நடத்தினால் காவல்துறை நடவடிக்கையாம்

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்த ஆண்டு தமிழினப் படுகொலை நினைவு நாள், தமிழினப் படுகொலை நினைவுக் கிழமையாக தொடர்ந்து ஏழுநாட்கள் நினைவேந்தல் நடத்தினர் இலங்கையில் தமிழர்கள். 

தமிழகத்தில் கடந்த ஆண்டு மெரினாவில் நினைவேந்தல் நடத்தியதற்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

அதற்கு முந்தைய ஆண்டு வரை நினைவேந்தல் நிகழ்வு மிக பிரமாண்டமாக நடத்தப் பட்டு வந்;;;தது. 

இந்த ஆண்டு மே17  இயக்கம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ மாநிலத்தலைவர் தெகலான் பாகவி, கே.எம்.செரீப், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலை கழகம் தோழர் தபசி குமரன், காஞ்சி மக்கள் மன்றம் மகேஷ், தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழர் விடுதலை கழகம் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் மே 17 இயக்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்துறை, நினைவேந்தல் நிகழ்வை பெரும்பாலான அமைப்பினர் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், உள் அரங்குகளிலும் நடத்திய போதும், சில அமைப்புகள் பொதுமக்கள் கூடும் மெரினாவில் கூடுவதாக அறிவித்துள்ளன. எனவே யாரும் போராட்டம் என்ற பெயரில் மெரினாவில் தடையை மீறி கூடி, பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனவும் மீறி போராட்டம், ஆர்ப்பாட்டம், நினைவேந்தல் என்ற பெயரில் ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,792. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.