பிக்பாஸ் இரம்யா பாண்டியனுக்கு கிடைத்துள்ளது அரிய வாய்ப்பு. சூர்யா படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவத்தில் கலந்து கொண்டு பேரறிமுகமான இரம்யா பாண்டியன், அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளாராம். தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இரம்யா பாண்டியன், இணையப்படக்காட்சிகள் மூலம் நிறைய கொண்டாடிகளை ஈர்த்திருந்தார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவத்தில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது கொண்டாடிகள் வட்டம் பெரிதானது. இந்நிலையில், நடிகை இரம்யா பாண்டியன் அடுத்ததாக சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பாடான அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



