Show all

கண்ணியம் காத்த ரஜினியின் தூத்துக்குடி இரசிகர்கள்! ரஜினியைப் போல் அளப்பறை செய்யாமல்

24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

வழக்கமாக ரஜினி படம் எனில் ரசிகர்கள் பட்டாசு, மேள தாளங்கள் என கொண்டாட்டங்களுடன், முதல் காட்சியை பார்ப்பது வழக்கம். ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13பேர்கள் பச்சைப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடியில் காலா படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாக,  2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தி விட்டு  காலா படத்தை பார்த்தனர். 

ஜப்பானில் காலா படம் வரும் ஞாயிறு அன்று வெளியாக இருக்கிற நிலையில், அழகாக தமிழ் பேசத் தெரிந்த ஒரு ஜப்பானிய ரஜினி ரசிகர், காலா படத்தை வெளியான அன்றே பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை வந்து, காலா படத்தைப் பார்த்து விட்டு காலா படம் அருமையாக வந்திருப்பதாக திறனாய்வு செய்தார்.

ரஜினி தன் படத்தில் நடிக்கும் போது பேசுகிற அரசியல் நச்சுகளையே எதார்த்ததில் நடைமுறை படுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ரஜினியின் திரைப்பட நச்சுகளில் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் நச், நடைமுறையில் பாஜக பின்பாட்டாகி விடுகிறது. 

இந்த அடிப்படையில் ரஜினி தமிழக அரசியலில் இயங்கினால், சிவாஜிகணேசன் ஆகிப் போவார் என்பதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,811. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.