12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ்வை காதலிப்பதாக செய்தி வந்தது. அதை உறுதிபடுத்தும் வகையில் சுருதி நிகழ்ச்சிகளில் மைக்கேலுடன் கலந்துகொள்கிறார். இது குறித்து கமலிடம் கேட்டபோது 'என் மகள்களின் திருமணத்தை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். என் கல்யாணத்தையோ விவாகரத்தையோ என் அப்பா முடிவு செய்யவில்லை. அதுபோல அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிட்டேன். அவர்கள் சுயவிருப்பம் தான் எனக்கு முதன்மை என்று பச்சைக் கொடி காட்டி விட்டார். வட இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்துள்ளதாக பிரபல இதழ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக, நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியங்கா இருவரும் ஒன்றாக இணைந்து நியூயார்க்கில் வலம் வந்து உள்ளனர். சில ஆண்டுகளாகவே இருவருக்கும் நட்பு இருந்தாலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தான் அதிகமாக இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று, ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவின் விளைவாக, சல்மான் கானுடன் நடித்து வெளிவர இருந்த பாரத் படத்தில் இருந்து, பிரியங்கா சோப்ரா விலகினார். இது குறித்து, பாரத் பட இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபார் தனது கீச்சுப் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தி உள்ளார். அதில், மிக முதன்மையானதும் மகிழ்ச்சியானதுமான நிகழ்விற்காக பிரியங்கா சோப்ரா பாரத் படத்தில் இருந்து விலகுகிறார் என்றும், அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டு உள்ளார். பிரியங்கா திருமணம் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கிறதாம். அதுசரி! தெற்கே சுருதிஹாசன் வடக்கே பிரியங்கா சோப்ரா, குடியேறுவார்களா இலண்டனும், அமெரிக்காவும -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,862.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



