16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாமனன் படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார் பிரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல், அரிமா நம்பி என அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களின் மூலம் தன்னை திரையுலகில் முன்னணி நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டார்.ஆனால், சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் குறைந்துள்ள நலையில். சில நாட்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் எல்கேஜி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நான் இன்னும் இருக்கின்றேன் என்பதை தெரிவித்தார். இந்த படம் ரசிகர்கள் நடுவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்: நான் வெளிநாட்டில் வளர்ந்தாலும் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் என்பதில் எந்த விதமாற்றமும் இல்லை. சென்னையில் என்னுடைய தாத்தாவும், பாட்டியும் மட்டும் தான் இருக்கிறார்கள். திரையுலகில் எனக்கு யாரையும் தெரியாது. என்னை திரையுலகிற்கு அறிமுகப் படுத்த, முன்பே என்னைத் தெரிந்தவர்கள் என்று யாரும் திரைத்துறையில் இருக்க வில்லை. சொல்லப்போனால் திரையுலகிற்கு நான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது நடிகையாக அல்ல. சங்கர் அவர்களிடம் உதவியாளராக வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. அவருக்கு தேநீர், குளம்பி கொடுக்கிற வேலை கிடைத்தால் கூட போதும் என்று, அப்படியொரு தவிப்புடன் இருந்தேன். ஆனால், இப்போது ஐந்து மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிற நடிகையாகிவிட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,077.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.