16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அஜித்தின் மனைவி சாலினி பயன்படுத்தும் செல்பேசியைப் பார்த்துவிட்டு வியக்காதவர்களே இல்லை. அஜித்தின் மனைவி சாலினி மகன் ஆத்விக், மகள் அனோஷ்காவுடன் வெளியே வரும்போது ரசிகர்கள் தம்படம் எடுக்க விரும்பினால் காட்சி கொடுக்கிறார். அப்படி அவர் அண்மையில் தனது மகனுடன் வெளியே வந்தபோது தல ரசிகர் ஒருவர் அவர்களுடன் சேர்ந்து தம்படம் எடுத்துள்ளார். அந்தத் தம்படத்தைப் பார்த்தவர்களுக்கு வியப்பும், அதிர்ச்சியுமாக இருந்தது. காரணம் சாலினி நோக்கியா 3310 செல்பேசியை கையில் வைத்திருந்தார். அந்த போனின் விலை ரூ.3,200 ஆகும். தற்போதுள்ள இளசுகளிடம் அந்த பேசியைக் கொடுத்தால், இதை எல்லாம் யார் பயன்படுத்துவார்கள் என்று தூக்கி வீசிவிடுவார்கள். ஆனால் தமிழத்திரையுலகின் முன்னணி நடிகரின் மனைவி அந்த பேசியைத்தான் பயன்படுத்துகிறார். அஜித்தை போன்றே சாலினியும் எளிமையானவர். அஜித்தும் சாதாரண பேசியைத்தான் பயன்டுபடுத்துவதாக அவருடன் நடித்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,077.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.