Show all

பாவம் ரஜினி! சிலை கூட சரியாக வரவில்லை; ஜெய்பூர் கோட்டை அருங்காட்சியகத்தில் ரஜினிக்கு மெழுகுச் சிலை

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெய்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் ரஜினிகாந்துக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்த காலா படம் எதிர்ப்புக்கு இடையே கர்நாடகாவிலும் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. நல்ல விமர்சனம் எழுந்தும் முதல் நாள் வசூல் குறைவாகவே வந்தது.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் ரஜினிகாந்துக்கு மெழுகுச் சிலை வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அருங்காட்சியகமும் அவர்களின் கோரிக்கையை ஏற்றது. 

ரஜினி காலா படம் வெளிவந்த அதே நாளில் ஜெய்பூர் அருங்காட்சியகத்தில் ரஜினிகாந்தின் மெழுகுச் சிலை திறந்து வைக்கப்பட்டது. 5.9 அடி உயரத்தில் 55 கிலோ எடை கொண்ட அந்தச் சிலையை உருவாக்க 3 மாதங்கள் ஆகியுள்ளது. காலா வெளியீட்டு நாளில் படையப்பா பட ரஜினியின் சிலையை திறந்து வைத்துள்ளனர். அருங்காட்சியகத்திற்கு செல்லும் ரசிகர்கள் ரஜினி சிலையுடன் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். ஆனால் அந்த சிலை ரஜினி போன்று இல்லை என்பதுதான் வேடிக்கை. ரஜினிக்கு சிலைகூடாவா சரியாக அமையவில்லை. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,814.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.