ஹேம்நாத் கைது செய்யப்பட்டதுடன் இந்தப் பாடு முடிவுக்கு வராது என்கிறார்கள். அதேபோல, பலபேரை காப்பாற்றுவதற்காக, ஹேம்நாத் மட்டுமே இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹேமந்த்தின் அப்பா சொன்னதையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. 03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்ரா மரணம் குறித்த தகவல்கள் புதுசு புதுசாக வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஹேமந்த் சிறையில் அடைக்கபட்ட நிலையிலும், அவர் எப்படி சித்ராவை ஏமாற்றினார், எப்படி தற்கொலை வரை தூண்டினார் என்பது குறித்து ஆதரங்கள் கசிந்து வருகின்றன. ஒரு அரசியல் பேரறிமுகம் சித்ராவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வந்ததாக, அவர் அனுப்பிய புலனச்சேதி மூலம் தெரியவந்தது. சித்ரா, கடைத்திறப்பு விழாக்களுக்கு அதிகம் செல்வதால், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் சித்ராவுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் காவல்துறை வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்தது. ஹேமந்த் சித்ராவை எப்படி எல்லாம் ஏமாற்றி பணம் கறந்தார் என்பது குறித்தும் காவல்துறை தகவலில் தெரியவந்துள்ளது. சித்ரா குடும்பத்தை தெரிந்த அளவுக்கு ஹேமந்த்தின் குடும்பம் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிய வரவில்லை. ஆனால் எளிய குடும்பத்தில் இருந்துதான் ஹேமந்த் வந்துள்ளார். இவர் அப்பா இரவிச்சந்திரன் கார் ஓட்டுநராக வாழ்க்கையை தொடங்கியவராம். பிறகுதான் சிங்கப்பூரில் வேலை கிடைத்ததும், அங்கு சென்று பாடுபட்டு உழைத்து குடும்பத்தை காப்பாற்றி உள்ளார். அப்பா வெளியூரில் வேலை பார்க்கும் சமயம், ஆடம்பர விரும்பியான ஹேமந்த்தோ, நவீன நடை உடை ஒப்பனைகளோடு, பெரிய வீட்டு பிள்ளை போலவே வலம் வந்துள்ளார். வீட்டில் அளவுக்கு அதிகமான செல்லம். எதையும் தட்டிக் கேட்கவோ, கண்டிக்கவோ யாரும் இல்லாமல் தான்தோன்றித்தனமாகவே வளர்ந்திருக்கிறார். அம்மாவின் பேச்சும் அவரிடம் எடுபடவில்லை. நாளடைவில் பெரிய ஆட்களின் மகன்கள், மிகப்பெரிய அரசியல்வாதிகளின் மகன்கள் என சிலருடன் தொடர்பு வைத்து கொண்டு, குடி, விருந்து என்று சுற்றி வந்தாராம். மோசடி பேரறிமுகங்களின் மகன்களுடன் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டு, பெரிய இடத்து பழக்கம் தனக்கு இருப்பதாக தனக்கு தெரிந்தவர்களிடம் காட்டிக் கொண்டு, அரசு வேலை, மருத்துவ இடம் வாங்கி தருகிறேன் என்று உதார் விட்டு, கோடிக்கணக்கில் மோசடி செய்யத் தொடங்கியுள்ளார். பிறகு சின்னத்திரை தொடர்களில் வாய்ப்பு இழந்த நடிகைகளிடம், பெரிய வாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி அங்கேயும் வேலை காட்டி உள்ளார் ஹேமந்த். அப்படித்தான் அந்த வலையில் விழுந்துள்ளார் சித்ராவும். பெரிய கார், வசதியான வாழ்க்கை, பெரியாட்கள் தொடர்பு, அரசியல்வாதிகளின் மகன்களுடன் புகைப்படம், என இதையெல்லாம் பார்த்து சித்ரா ஏமாந்தே விட்டார் போலும். அதிலும் ஒருசில பெரியாட்களின் மகன்களை அறிமுகம் செய்து வைக்கவும் ஹேமந்த் மீதான நம்பிக்கை மேலும் அதிகமாகி உள்ளது. தன்னை ஒரு தொழிலதிபர் என்றுதான் சித்ராவிடம் பிள்ளையார் சுழியை போட்டுள்ளார் ஹேமந்த். ஆனால், நாளடைவில் காசுக்கு வந்து ஹேமந்த் தன்னிடம் நின்றதும்தான் சித்ரா அதிர்ந்து போயுள்ளார். முதன்மையான அரசியல்வாதி ஒருவரின் மகன் தனக்கு நெருக்கம் என்று சொல்லி, மருத்துவ இடத்திற்காக கோடி கணக்கில் ஏமாற்றி உள்ளார் ஹேமந்த். அதனால் பணத்தை இழந்தவர்கள் ஹேமந்த்தை நெருக்கவும், ஹேமந்த் சித்ராவிடம் பணத்தை கறக்க ஆரம்பித்துள்ளார். அப்படித்தான் ஹேமந்த் சாயம் வெளுக்க தொடங்கியது. ஹேந்த்தின் நண்பரான அரசியல்வாதி மகனுக்கும் சித்ரா மீது ஈர்ப்பு இருந்ததாக சொல்கிறார்கள். அவர் யார் என்றும் தெரியவில்லை. நாளுக்கு நாள் ஹேமந்த் மீது புகார்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. ஒருவேளை இந்த புகார்கள் எல்லாம் உண்மையாக இருந்து, போலீஸ் தரப்பும் தொடக்கத்திலேயே ஹேமந்த் மீது கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் சித்ரா உயிரிழக்காமல் தடுத்திருக்கலாம். எனினும், இந்த மரணத்தில் இன்னும் மர்மங்களும் அரசியல் வாடையும் சேர்ந்து அடிப்பதால், ஹேம்நாத் கைது செய்யப்பட்டதுடன் இந்தப் பாடு முடிவுக்கு வராது என்கிறார்கள். அதேபோல, பலபேரை காப்பாற்றுவதற்காக, ஹேம்நாத் மட்டுமே இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹேமந்த்தின் அப்பா சொன்னதையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



