வரைகலை. கருநாகம், ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் நீயா 2 வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது. 22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அதிர்ச்சி மற்றும் காதல் கலந்த திரைப்படமாக உருவாக்கப் பட்டிருக்கிறது வரும் வெள்ளியன்று திரைக்கு வரும் படம் நியா 2. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,143.
ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலரோடு, இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாக இருப்பது கருநாகம். பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பாம்பின் வரைகலைக் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் வைத்திருக்கிறார்கள்.
படக்குழுவினர், பாம்பிற்காக பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா கிராமம் என்ற இடத்தில் உள்ள பாம்பை தேர்வு செய்திருக்கிறார்கள்.
முதலில் உண்மையான பாம்பை வைத்து எடுக்க முயன்று, பாம்பிற்கு ஒரு கிழமை காலம் மட்டுமே உண்மை உருவம் இருக்க, அதற்கு மேல் தோல் உரிவதும் வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று பாம்பை வரைகலையில் உருவாக்க முயன்றதாக இயக்குநர் சுரேஷ் தெரிவிக்கிறார்.
பலமான திரைக்கதையும், பாம்பின் சாகச காட்சிகளும் மக்களிடம் எடுபடும் என்று கருதுகிறார் இயக்குநர். 'நீயா' படத்தில் நல்ல பாம்பு இடம் பெற்றிருக்கும். அதைவிட அதிகமாக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இப்படத்தில் கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தார்களாம்.
'நீயா' படத்திற்கும் இந்த படத்திற்கும் பெயர், பாம்பைத் தவிர எந்த சம்பந்தமும் கிடையாதாம். நீயா படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமாக உருவம் மாறி பழி வாங்கும். ஆனால், இந்த படத்தில் அப்படி இருக்காதாம். இப்படத்தில் பாம்புக்கென்று பெயர் கிடையாதாம். இவ்வாறு இயக்குனர் எல்.சுரேஷ் தெரிவிக்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.