‘யாரைக் காப்பாற்ற இந்த கைது நடந்துள்ளது’ என்று சித்ரா மாமனார் ஏன் கேட்டார் என்றே தெரியவில்லை. ஆனால் இப்போது இந்த கேளொலியால் அவரும் வசமாக சிக்கி கொண்டுள்ளார். 02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்ரா தற்கொலை வழக்கில், புதிய தகவல் ஒன்று காவல்துறை தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது. அதன்படி சித்ரா கடைசியாக பேசியது சித்ராவின் மாமனாரிடம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சித்ரா இறந்து ஒரு கிழமை ஆன நிலையிலும், அதன் அதிர்ச்சி இன்னமும் கொண்டாடிகளிடமிருந்து இருந்து விலகவே இல்லை. இது தற்கொலைதான் என்று உறுதிப்படுத்தப்பட்டாலும், அதற்கான காரணத்தை தெரியாமல் தவித்து போய் உள்ளனர். காவல்துறையினர்- ஹேமந்திடமும், சித்ரா பெற்றோரிடமும், ஹேமந்த் பெற்றோரிடமும், தொலைக்காட்சி தொடர் குழுவிடமும், உணவக நிர்வாகத்திடமும், என அனைத்து தரப்பிலும் விசாரணையை நடத்தி முடித்துள்ளது. இதில் முதல்நாள் விசாரணையின்போதே, சித்ராவின் செல்பேசியைக் கைப்பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினர். அப்போதுதான் அதில், இருந்த சில பதிவுகள் அழிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதுதான் காவல்துறையினருக்கு முதல் ஐயத்தை கொடுத்தது. ஒருபக்கம் ஹேமந்திடம் விசாரணை நடத்தி வந்தாலும், அழிக்கப்பட்ட கேளொலி என்னவாக இருக்கும்? அது ஏன் அழிக்கப்பட்டது? யார் அழித்தது? காவல்துறை விசாரணை தொடங்குவதற்குள் இதனை அழிக்க காரணம் என்ன? என்ற புள்ளியில் இருந்து விசாரணை தொடங்கியது. சுழியம் குற்றவியல் பிரிவு உடனடியாக அழிக்கப்பட்ட கேளொலியை மீட்டுக் கொடுத்தது. அதில் இருந்த பதிவுகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன. அப்போதுதான் தெரிந்தது, சித்ரா கடைசியாக அவரது மாமனாரிடம் பேசியிருக்கிறார் என்பது. அதில், அதுவரை தங்களுக்குள் நடந்த சண்டைகளை ஒன்றுவிடாமல் சொல்லி அழுதுள்ளார். அதேபோல, மாமனார் செல்பேசியில் உள்ள அழைப்புகளையும் ஆராய்ந்து இதனை உறுதி செய்தனர் காவல்துறையினர். சந்தேகத்தால், அன்றாடம் இழிவான சொற்களால் ஹேமந்த் திட்டி தன்னை காயப்படுத்துவதாக சொல்லி கதறி அழுதாராம் சித்ரா. இன்னும் கொஞ்ச நாளில் திருமணம் நடக்கும்போது, இப்படி அவர் செய்வது சரியில்லை என்று கண்ணீர் விட்டாராம். இதற்குப் பிறகுதான், சித்ரா தற்கொலை செய்துள்ளார். சித்ரா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்த அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததுமே, சித்ராவின் செல்பேசியில் இருந்த இந்த தகவல்களை, ஹேமந்த் அழித்துள்ளார். ஆனால், இதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று 6 நாளாக சாதித்து வந்துள்ளார். மீட்டெடுக்கப்பட்ட மாமனாரின் கேளொலியை வைத்துதான் ஹேமந்த் வசமாக சிக்கினாராம். ‘யாரைக் காப்பாற்ற இந்த கைது நடந்துள்ளது’ என்று சித்ரா மாமனார் ஏன் கேட்டார் என்றே தெரியவில்லை. ஆனால் இப்போது இந்த கேளொலியால் அவரும் வசமாக சிக்கி கொண்டுள்ளார். வருவாய் கோட்டாட்சியர் விசாரணை முடிந்தபிறகுதான் குற்றவாளியை உறுதி படுத்துவதற்கான தெளிவான தடம் கிடைக்கும் என்று தெரியவருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



