Show all

நீலிமாஇசையாக மாறியிருக்கிறார் நீலிமாராணி!

நீலிமா இசை என்று பெயர்மாற்றம் செய்து கொண்டு, சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு கதைத்தலைவியாக நுழைந்திருக்கிறார் நீலிமாராணி 

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை மின்மினியாகத் தமிழ்திரையுலகில் அறிமுகமானார் நீலிமா இசை. யாராது நீலிமா இசையா, நீலிமாராணிதான் தற்போது நீலிமா இசை என்று பெயர்மாற்றம் செய்து கொண்டு சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு கதைத்தலைவியாக நுழைந்திருக்கிறார்.

தேவர் மகனைத் தொடர்ந்து விரும்புகிறேன், தம், மொழி, இராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் முதன்மை வேடங்களில் நடித்து உள்ளார் நீலிமாஇசை. 

அண்மைக் காலமாக நடிகைகள்- நடிகர்கள் உடன் சேர்ந்து காதல்இசை  பாடுவதை தவிர்த்து, கதைத்தலைவிக்கு முதன்மைத்துவம் தரும்  படங்களில் விரும்பி நடித்து வருகிறார்கள். அதனால் சாதனை பெண்மணிகளின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளிவர தொடங்கி உள்ளன. 

நயன்தாரா, திரிசா, அனுஷ்கா போன்ற பல முன்னணி நடிகைகள் கதைத்தலைவிக்கு முதன்மைத்துவம் உள்ள படங்களில் தாம் நடித்து வருகிறார்கள். 

இந்த வரிசையில் தற்போது நடிகை நீலிமா இசையும் சேர்ந்து இருக்கிறார். தற்போது இவர் ‘கருப்பங்காட்டு வலசு’ என்ற படத்தில் கதைத்தலைவியாக நடிக்கிறார். இந்நிலையில் நடிகை நீலிமாஇசை அவர்கள் சோதிடர் ஒருவரின் அறிவுரையை ஏற்று தனது பெயரை மாற்றிக் கொண்டு உள்ளார். 

படம் குறித்து நீலிமாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: நான் கருப்பங்காட்டு வலசு என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்தப் படம் குற்றப்பின்னணியில் திகிலான கதையம்சம். ஒரு பெண் பழைய பழக்க வழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட ஒரு கிராமத்தை நவீனமாக மாற்ற முயற்சிக்கிறார். அப்போது அந்த ஊரில் ஒரு குற்றம் நடக்கிறது. அதன் விளைவுகள் தான் இந்த திரைக்கதை. இந்தப் படத்தை செல்வேந்திரன் இயக்குகிறார் என்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.