தனது பிறந்தநாள் கொண்டாட்டக் காணொளியை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொளி அவரது கொண்டாடிகளால் தீயாக்கப்பட்டு வருகிறது. 29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர்- கொண்டாடிகளை மகிழ்விப்பதில் முன்னணியில் உள்ளது. கொரோனா நுண்நச்சின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தத் தொடரின் படப்பிடிப்பு, அரசின் உத்தரவின் பேரில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மீனா என்ற வேடத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ். இவர் இந்தத் தொடரில் தற்போது இவர் கருவுற்று இருப்பதாக நடித்து வருகிறார். உண்மையிலேயும் இவர் கருவுற்றிருக்கிறாராம். இந்நிலையில் அவரது பிறந்த நாளை அவரது கணவர் சதீஷ் மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருக்கிறார். தனது பிறந்தநாள் கொண்டாட்டக் காணொளியை ஹேமா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொளி அவரது கொண்டாடிகளால் தீயாக்கப்பட்டு வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



