ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் மூலம் பேரறிமுகமான எழுச்சிப் பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் காலமானார். 24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இயக்குநர் சேரனின், ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் மூலம் பேரறிமுகமான பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் காலமானார். தமிழகத்தில் ஒரு காலக்கட்டத்தில் ஒவ்வொரு வாயும் முனுமுனுத்த அந்தப்பாடல் ஒவ்வொரு பூக்களுமே என்று தொடங்கும் ஆட்டோகிராப் படத்தில் இடம் பெற்ற பாடல். அந்தப் பாடல் மூலம் பேரறிமுகமானவர் பாடகர் கோமகன். இந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற கோமகன் இசைக்குழு, முழுக்க பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளால் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. இப்பாடலுக்கு ஒன்றிய விருதும் கிடைத்தது. ‘ ஆட்டோகிராப் படத்துக்கு பிறகு கோமகன் இசைக்குழு மேலும் பேரறிமுகமானது. சென்னை தொடர்வண்டிப் பெட்டித் தொழிற்சாலையில் கோமகனுக்கு அரசு வேலை கிடைத்தது. இந்த நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு கோமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார். கோமகனுக்கு அனிதா என்ற மனைவி, மோனஸ், மோவின் என 2 மகன்கள் உள்ளனர். கோமகனுக்கு அண்மையில் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது. கோமகன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இயக்குநர் சேரன் தனது கீச்சுப் பக்கத்தில், ‘‘மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர். அவரது குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர். அவரது மறைவு செய்தி நெஞ்சை நொறுக்கியது. கோமகன் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.