இன்று முதல் ஒளிபரப்பாக இருந்த தொடர்களின் புதிய அத்தியாயங்கள் ஒளிபரப்பாகாது என்று விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புதிய அத்தியாயத்தைப் பார்க்க நினைத்த கொண்டாடிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். 03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் தற்போதைக்கு சன் தொலைக்காட்சியின் இடத்தைப் பிடித்து, விஜய் தொலைக்காட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பு நாடகங்கள் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு தமிழ்மக்களிடம் வரவேற்பு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட விஜய் தொலைக்காட்சி, சொந்தமாக நாடகங்களைத் தயாரித்து ஒளிபரப்பி, முதலிடத்தைப் பிடித்தது. ஊரடங்கு காரணம்பற்றி நாடகங்களுக்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்ட நிலையில், பழைய நிகழ்ச்சிகளையே தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி வருகின்றன. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வில் கொஞ்சம் காட்சிகள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் இன்று முதல் விஜய் தொலைக்காட்சியில் புதிய நாடகங்கள் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்களின் புதிய அத்தியாயங்கள் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சென்னையில், மீண்டும் வரும் வெள்ளிக் கிழமை முதல் பனிரெண்டு நாட்கள் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து சின்னத்திரை படப்பிடிப்பு, நிறுத்தப்படுவதாக பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார். இதனிடையே இன்று முதல் ஒளிபரப்பாக இருந்த தொடர்களின் புதிய அத்தியாயங்கள் ஒளிபரப்பாகாது என்று விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புதிய அத்தியாயத்தைப் பார்க்க நினைத்த கொண்டாடிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆம் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்திற்கு கொண்டாடிகள் மிக அதிகம். அந்த நாடகத்தில் முல்லை கதிர் என்று இரண்டு கதைத்தலைமைகளை வைத்து, தொடாமல் படாமல், ஒட்டாமல் உரசாமல் குறுந்தொகை காட்சிகளைப் போல மென்மையான காதல் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையாக ஒளிபரப்பி கொண்டாடிகளின் நெஞ்சத்தை கொள்ளையிட்டு வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் விஜய் தொலைக்காட்சி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



