Show all

தீயாகிவரும் கீச்சு! சிறுநீரகத்தை வித்தாவது காசு தர்றேன் தயவுகூர்ந்து மீராவை வெளியே அனுப்பிடுங்க பிக்பாஸ்: நடிகர் சதீஷ்

கிட்னியை வித்தாவது பணம் தருகிறேன். தயவுகூர்ந்து மீராவை வெளியே விடுங்கள் என நடிகரும் பிரபல நடன இயக்குநருமான சதீஷ் வெளியிட்டுள்ள கீச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக் பாஸ் போட்டியாளர்  மீரா மிதுன், சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சேரன் மீது அவர் வைத்த  புகார், அதன் பொருட்டு சேரன் வாய்விட்டு அழுதது, பிக்பாஸ் நிகழ்ச்சிப் பார்வையாளர்களை, மீரா மீது கோபம் கொள்ள வைத்திருக்கிறது. இதனால் சேரனுக்கு ஆதரவாக பலர் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதோடு, மீரா இதற்கு முன் செய்த பல பிரச்சினைகளையும் காணொளிகளாகவும், புகைப்படங்களாகவும் வெளியிட்டு வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து மீராவை வெளியேற்றும்படியும் அவர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் பிரபல நடன இயக்குநருமான சதிசும் மீராவை வெளியேற்றும்படி ஒரு கீச்சு வெளியிட்டு தீயாக்கியுள்ளார். 
அதில் அவர், ‘மீராவை வெளியே கொண்டு வாங்க. எவ்ளோ செலவானாலும் நான் என் சிறுநீரகத்தை விற்கிறேன்’ என்று சதீஷ் தெரிவித்துள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,227.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.