Show all

பதினேழாவது போட்டியாளர் செம்பாவா! பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எகிறும் எதிர்பார்ப்புகள்

விஜய் தொலைக்காட்சியில், இராஜா இராணி தொடர் புகழ் ஆல்யா மானசா- செம்பருத்தி- செம்பாவிற்கு  பெரும் இரசிகர் பட்டாளமே உள்ளது. இராஜா இராணி தொடர் முடிந்து நிலுவையில் இருக்கும் செம்பாவை, பிக்பாஸ் நிகழ்ச்சியின் பதினேழாவது போட்டியாளராக களமிறக்க உள்ளார் பிக்பாஸ் என்கிற செய்தி வெளியாகி, விஜய் தொலைக்காட்சி பார்வையாளர்கள் நடுவே பரபரப்பு கிளம்பியுள்ளது.

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக இராஜா இராணி தொடர் புகழ் ஆல்யா மானசா களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் பருவம்-3 நிகழ்ச்சியின் தொடக்க நாளன்று 15 போட்டியாளர்களைக் கமல் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். அதற்கு மறுநாள் 16வது போட்டியாளராக மீரா மிதுன் வீட்டிற்குள் சென்றார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தன்னிடம் 17 அட்டைகள் இருப்பதாகவும், எனவே இம்முறை 17 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்றும் கமல் மறைமுகமாகத் தெரிவித்திருந்தார். அதில், ஏற்கனவே 16 போட்டியாளர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். அவர்களில் இரண்டு பேர் வீட்டை விட்டும் வெளியேறி விட்டனர்.

எனவே, வரும் கிழமைகளில் அந்த 17வது போட்டியாளர் வீட்டிற்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வேறு யாருமல்ல, இராஜா இராணி தொடர் புகழ் ஆல்யா மானசா தான் எனக் கூறப்படுகிறது. அந்தத் தொடரும் முடிந்து ஆல்யா மானசா நிலுவையில் உள்ள நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்யா நன்றாக நடனம் ஆடக்கூடியவர். ஏற்கனவே அவருக்கு ரசிகர்கள் மிக மிக அதிகம் பேர் உள்ளனர். எனவே அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் நிச்சயம் லாஸ்லியாவிற்குத் தான் போட்டியாக இருக்கும். என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனாலும் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் வரை எதுவுமே உறுதியில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,215.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.