Show all

'பிக்பாஸ்2' விளம்பரக் காணொளியை வெளியிடுகிறார் கமல்ஹாசன்! இன்று மாலை ஐந்து மணிக்கு

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. நிகழ்ச்சி தொடங்குவதற்க்கு முன் தொகுப்பாளர் யார், பங்கேற்பவர்கள் யார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. யாரும் எதிர்பாராத தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் களமிறங்கினார்.

பங்கேற்பவர்கள் என  சமூக வலைதளங்கள் பல பட்டியல்களை வெளியிட்டன, கடைசியில் விஜய் தெலைக்காட்சி அதிகாரபூர்வ பட்டியலை  வெளியிட்டது. ஓவியா, வையாபுரி உள்ளிட்ட சினிமாவில் வாய்ப்பில்லாதவர்களே அதிகம் இடம் பிடித்திருந்தனர். பிக்பாஸ்தான் அந்த நிகழ்ச்சி. 

அதே எதிர்பார்ப்புகளோடு 'பிக்பாஸ் இரண்டு' தயாராகி விட்டது. சரியாக இன்னும் ஒரே மாதத்தில்  தொடங்கப்படவிருக்கிற நிலையில் அதற்கான விளம்பரக் காணொளி இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசனே தன்னுடைய கீச்சுப் பக்கத்தில் வெளியிடவிருக்கிறார். இதற்கும் தொகுப்பாளர் கமல்ஹாசனே. போட்டியாளர்களும் தேர்வாகி விட்டதாகவே தெரிகிறது. வலையொளியில் அது குறித்த பல்வேறு பட்டியல்களை வெளியிட்டும்  வருகிறார்கள்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,785.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.