Show all

ஜமீன்சிங்கம்பட்டி பிரமநாயகம் அசத்தல்! காருக்கு தென்னங்கீற்றுக் கூரை வேய்ந்து பயணிக்கிறார்

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அம்பையில் கோடை வெயிலை சமாளிக்க குளிர்ச்சியை தரக்கூடிய தென்னங்கீற்று கூரை வேய்ந்து கார் வலம் வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது. 

கோடை காலம் வந்ததுமே சுட்டெரிக்கும் வெயிலை கண்டு அஞ்சி எப்படி தப்பிப்பது என்ற சிந்தனைதான் அனைவரது மனதிலும் எழும். இதனால் ஏராளமானோர் குடும்பத்துடன் உதகை, கோடைக்கானல், ஏரிக்காடு, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுகின்றனர். இந்த ஆண்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோடைக்கு முன்னதாகவே வெயில் வாட்டி வதைத்த நிலையில், அவ்வவ்போது இடி, மின்னலுடன் மழையும் பெய்து வருகிறது. கோடையின் உச்சமான அக்னி வெயில், சித்திரை கடைசி ஏழுநாள் வைகாசி முதல் ஏழு நாள் என்ற நிலையில் அக்னி வெயிலை இன்னும் வைகாசியில் முழுதாக அனுபவிக்க வேண்டியுள்ளது. 

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அவ்வளவாக தெரியாவிட்டாலும், நேற்று அனலாய் சுட்டெரித்தது. தகிக்கும் வெயிலால் வாகனங்களில் செல்வோர் பாடு பெரும் திண்டாட்டம்தான். 

இதன் காரணமாக தானி, கார் உள்ளிட்ட வாகனங்களின் கூரைகளில் தென்னை கீற்றை கட்டிக் கொண்டு வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர். இதேபோல் மணிமுத்தாறு அருகே உள்ள ஜமீன்சிங்கம்பட்டியை சேர்ந்த பிரமநாயகம் என்பவர் தனது காரின் கூரையில் தென்னங்கீற்றை வேய்ந்து வலம் வருகிறார். நெடுஞ்சாலை துறையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தற்போது உழவுப் பணியல் ஈடுபட்டு வருகிறார். 

சுட்டெரித்து வரும் கோடை வெயிலை சமாளிக்க தென்னை ஓலைதான் ஒரே வழி என்பதால் தனது கார் மீது தென்னங்கீற்றுகளை கொண்டு கூரை வேய்ந்த கதையை  பகிர்கிறார் மகிழ்ச்சியாக பிரமநாயகம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,785.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.