02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்ச்சி தொடரில் யார், யார் இருப்பார்கள் என்ற கேள்வி ஒவ்வொரு விஜய் தொலைக்காட்சி ஆர்வலர்களையும் குடைந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு பரபரப்புக்குள்ளாகி தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பகுதி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த முறை போலவே இந்த முறையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் விளம்பரக் காணொளியை நடிகர் கமல் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். இதில் கலந்துகொள்ள பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த பிரபலங்கள் பட்டியலில் இனியா, ராய்லக்ஷ்மி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சொர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரகஷிதா, கீர்த்தி சாந்தனு, பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், படவா கோபி, பவர் ஸ்டார் சீனிவாசன், ப்ரேம்ஜி, பாலசரவணன், தாடி பாலாஜி, ஜான் விஜய் ஆகியோர் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது. இதில் சிலர் வராமல் போகலாம் என்றும் தகவல் வருகிறது. கடந்த முறை பிக்பாசில் கலந்துகொண்டவர்கள், புகழின் உச்சிக்கே சென்றார்கள். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போட்டி ஏற்பட்டுள்ளது. சில இளம் நடிகர், நடிகையர் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,789.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



