பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் கையுயர்த்தி தன் மீதான இளமைக்கால தவறை ஒப்புக் கொள்ள, சரி சார்ந்த முயற்சியோ என்று கமல் பாராட்ட முயல, இல்லை தவறு சார்ந்த முயற்சிதான் என்று சரவணன் நிறுவ, அப்படியானால் (தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டவர் என்ற அடிப்படையில்) புனிதர் ஆகிவிட்டார் சரவணன் என்று முடித்துக் கொண்டார் கமல். ஆனால் அதே காரணம் முன்வைக்கப் பட்டு சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப் பட்டதில், உடன் பாடு ஏற்படாத பதிவுகள் சமூக வலைதளங்கில் உலா வருகின்றன. 22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் கையுயர்த்தி தன் மீதான இளமைக்கால தவறை ஒப்புக் கொள்ள, சரி சார்ந்த முயற்சியோ என்று கமல் பாராட்ட முயல, இல்லை தவறு சார்ந்த முயற்சிதான் என்று சரவணன் நிறுவ, அப்படியானால் (தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டவர் என்ற அடிப்படையில்) புனிதர் ஆகிவிட்டார் சரவணன் என்று முடித்துக் கொண்டார் கமல். இது குறித்து சமூக வலைதளங்களில் சலசலப்பு ஏற்பட பிக்பாஸ் கமுக்க அறைக்குள் சரவணனை அழைத்து மன்னிப்பு கேட்க வைக்கப் பட்டார் சரவணன். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடங்கத்தில் இருந்தே சேரனுக்கும் சரவணனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. தன்னுடன் இருக்கும் கூட்டாளிகளுடன் சேர்ந்து மற்ற போட்டியாளர்கள் பற்றி பின்னாடி பேசுவதும் என சரவணனின் நடவடிக்கைகளாக இருந்து வந்தன. சில நேரங்களில் அவருடைய நடவடிக்கைகள் சரியாக பட்டாலும், பல சமயங்களில் அதற்கு விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, சேரனிடம் அவர் காட்டி வந்த விரோத போக்கு நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சரவணன் கோபம் காட்டினாலும் சேரன் அமைதியாகவே இருந்தார். நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டார். அதற்கு காரணமாக கமல், ‘புனிதராகி விட்டார் சரவணன்’ என்றும், பிக்பாஸ் கமுக்க அறையில் பொதுமக்கள் அறியுமாறு மன்னிப்பு கேட்க வைத்த, சரவணன் கையுயர்த்தி தன் மீதான இளமைக்கால தவறை ஒப்புக் கொண்ட நிகழ்வே காரணமாகச் சொல்லப் பட்டது. ஆனால் சரவணனின் வெளியேற்றத்திற்கு அது காரணமல்ல என்ற ஒரு பதிவுக்கான ஆதாரக் காணொளி சமூகவலைதளங்களில் தீயாகி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கமல் சாக்ஷி-லாஸ்லியா-கவின் தொடர்பான சிக்கல்கள் பற்றி விசாரித்தார். அது தொடபாக லாஸ்லியாவிடம் கமல் பேசப் போகும் போது, சரவணன் உடனிருக்கும் போட்டியாளர்களுக்கு கேட்கும் படி கமலை ஒருமையில் குறிப்பிட்டு “கோர்த்துவிடுகிறார்” என்றார். இதுதொடர்பான 2 நொடி கணொளிதான் சமூகவலைதளங்களில் தீயாகி வரும் காணொளியாகும். தொடர்ந்து பலரை அவமதித்து வந்த சரவணன் ஏற்கனவே அதற்காக பலமுறை கண்டிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கமலை ஒருமையில் குறிப்பிட்டு பேசியதை தொடர்ந்து, வேறுவகையான காரணம் காட்டி பிக்பாஸ் வீட்டிலிருந்து சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்கின்றது சமூக வலைதள பதிவு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,237.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.