Show all

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளர் ஜாங்கிரி மதுமிதாவாம்!

இரண்டு பிக்பாஸ் பருவங்கள் வெற்றியானதைத் தொடர்ந்து பிக்பாஸ் பருவம் மூன்று இன்னும் சிறப்பாக வெளியாக விருப்பதாக விஜய் தொலைக்காட்சி பார்வையாளர்கள் நடுவே பரபரப்பு கிளப்பப் பட்டு வருகிறது.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சன் தொலைக்காட்சியில் இருந்து அதிக பார்வையாளர்களைக் விஜய் தொலைக்காட்சிக்கு கவர்ந்திழுத்த நிகழ்ச்சி பிக்பாஸ். பிக்பாஸ் முதல்பருவம் மிகச்சிறப்பான வெற்றியைத் தந்தது. அதனால் கடந்த ஆண்டு பிக்பாஸ் இரண்டாவது பருவமும் விஜய் தொலைக்காட்சியில் வெளியானது. அதுவும் ஓரளவிற்கு வெற்றியைத் தந்தது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் மூன்றாவது பருவம் தொடங்கவிருக்கிறது. 

'விரைவில் பிக்பாஸ்' என்கிற காணொளியில், கமல்ஹாசன் தோன்றி வழக்கம் போல: நூறு நாட்கள், ஒரேவீட்டில், பதினைந்து போட்டியாளர்கள், அறுபது படப்பிடிப்புக் கருவிகள் என்று பேசி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நம்மை கவர்ந்திழுக்கும் விளம்பரத்தைத் தொடங்கி விட்டார். 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் யார் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் நடுவே பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் மூன்றாவது பருவத்தில் 'பிக் பாஸ்' வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளரை உறுதி செய்திருக்கிறது விஜய் தொலைக்காட்சி.

அந்தப் போட்டியாளர் ஓ.கே. ஓ.கே. படத்தில் நடிகர் சந்தானத்துக்கு கதைத்தலைவியாக நடித்த காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவாம். சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமான நிகழ்ச்சியான சின்ன பாப்பா பெரிய பாப்பாவில் மிகச்சிறப்பாக நகைச்சுவை வழங்கியவர்.

சிவபக்தையான இவர், தனது உறவினரும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயலை அண்மையில்தான் திருமணம் செய்துகொண்டார். 

மணமாகி கொஞ்ச நாளிலேயே கணவரை மூன்று மாதங்கள் பிரிந்து எப்படி பிக் பாஸ் வீட்டுக்கு என்றால், 'அவங்களுக்குச் சவால்னா ரொம்ப பிடிச்ச விசயம். இந்த வாய்ப்பை ஒரு சவாலா எடுத்து பண்ணணும்னு நினைக்கிறாங்க. தவிர, இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கறதில்லையே! பொதுவாகவே வர்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க அவங்க' என்கின்றனர் மதுமிதாவுக்கு நெருக்கமானவர்கள்.

மேலும், முதல் இரண்டு பருவங்களிலும் கூட இவர் அழைக்கப்பட்டதாகவும் பல்வேறு காரணங்களால் அப்போது கலந்துகொள்ளவில்லை என்றும் அப்போது பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டியாளர்கள் யார் என்பதான தகவல் கிடைத்ததும், மீண்டும் பிக்பாஸ் பருவம் மூன்று குறித்து பேசுவோம். இந்த முறை பிக்பாஸ் முந்தைய இரண்டு பருவத்ததை விட சிறப்பாய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏனென்றால் கமல் அரசியலிலும் உலகப் புகழ் பெற்று வருகிறார் என்பதுதான் சிறப்புச் செய்தி!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,156.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.