Show all

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்குகிறாரா மாளவிகா மோகனன்!

பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பேரறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், நயன்தாராவை விட அதிகம் சம்பளம் வாங்குவதாக அவரது கொண்டாடிகள் பெருமை பீற்றிக் கொள்கின்றனர்.

12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பேரறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், நயன்தாராவை விட அதிகம் சம்பளம் வாங்குவதாக அவரது கொண்டாடிகள் பெருமை பீற்றிக் கொள்கின்றனர்.

இரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் கதைத்தலைவியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். ஒருபடத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் அளவு உயர்ந்ததை சக நடிகைகள் பொறாமையாக பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. மாஸ்டர் திரைக்கு வரும் முன்பே அவருக்கு பெரிய செலவுத்திட்டப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. 

இந்தநிலையில் ஹிந்திப் படமொன்றில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்தை ரவி உத்யவார் இயக்குகிறார். இவர் மறைந்த சிறிதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி படத்தில் மாளவிகா மோகனன் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இதற்காக கொரோனா ஊரடங்கில் சண்டை பயிற்சிகள் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். அதை மாளவிகா மோகனன் முந்திவிட்டார் என்று அவரது கொண்டாடிகள் பெருமை பீற்றிக் கொள்கின்றனர். மாளவிகா மோகனனை நயன்தாராவுடன் ஒப்பிட்டுப் பெருமை பீற்றிக் கொள்ளும் நிலையில் நயன்தாரா கொண்டாடிகள் சும்மா விடுவார்களா என்ன?

தீபீகா படுகோனே 70 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும், ஹிந்தித் திரைக்குப் போய் 5கோடி சம்பளம் வாங்குவது பெரிய செய்தியா என்ன? 

தமிழக மக்களின் அன்பைப் பெற்றால், பணத்தோடு முதல்வர் பதவியையும் தருகிற எங்கள் தமிழ்நாட்டில் நான்கு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதுதான் கெத்து என்கின்றனர் நயன்தாரா கொண்டாடிகள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.