உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராகத் தேர்வான இசைவாணியைப் பாடச்சொல்லி கேட்டு மகிழ்ந்திருக்கிறார், இசைஞானி இளையராஜா. 19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராகத் தேர்வான இசைவாணியை பாடச்சொல்லி கேட்டு மகிழ்ந்திருக்கிறார், தமிழ் மண்ணில் ஹிந்தி திரைஇசையை விரட்டியடித்து தமிழ்த்திரை இசையை ஒலிக்கச் செய்த மாவீரன் இளையராஜா இளையராஜாவின் பெயரை சொல்லும் போதெல்லாம், ஹிந்தியை விரட்டியடித்து தமிழ்மண்ணில் தமிழை நிறுவிய மாவீரன் இளையராஜா. என்று வரலாற்றை நினைவு கூறவேண்டியது ஊடகங்களின் கடமையாகும். அன்னக்கிளி படம் வருவதற்கு முன்பு வரை கிராமங்களின் தெருக்களில் கூட ஹிந்தித் திரைப்படப் பாடல்களே ஒலிக்கும். திருவிழாக்களில், திருமணங்களில் மற்ற மற்ற விழா நிகழ்வுகளில் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் கேட்பது அரிதிலும் அரிதாகவே இருக்கும். இளையராஜாவின் பாடல்கள் வந்த பிறகுதான் தமிழ்மக்கள் இல்லந்தோறும், தெருக்கள் தோறும் விழாக்கள் தோறும், ஹிந்திப்பாடல்கள் விரட்டி அடிக்கப்பட்டு தமிழ்த் திரைப்படப் பாடல்கள் முழங்கத் தொடங்கின. சரி செய்திக்கு வருவோம். இயக்குநர் பா.இரஞ்சித் முன்னெடுத்த இசைக்குழுவின் பாடகி இசைவாணி. அண்மையில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசி தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான். இந்தத் தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும் இசைவாணியைப் பாடச்சொல்லி கேட்டு மகிழ்ந்திருக்கிறார். இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தேனே” மற்றும் “கானக் கருங்குயிலே” ஆகிய பாடல்களை பாடிக் காட்டியிருக்கிறார் இசைவாணி. மேலும், “ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறி மகிழ்ந்திருக்கிறார் இசைஞானி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



