நடிகை அமலாபாலிடம் மணமுறிப்பு பெற்றுக் கொண்ட இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு நேற்று திருமணம் நடைபெற்றது. மணமகள் மருத்துவர் ஐஸ்வர்யா. 27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அஜித்தின் கிரிடம், விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வ திருமகள் போன்ற படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் விஜய், நடிகை அமலாபாலை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணமுறிப்பு பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் இயக்குனர் விஜய், மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா இணையரின் மகள் மருத்துவர் ஐஸ்வர்யாவை நேற்று திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,211.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



