Show all

தனது செயல்பாடுகளை முடித்துக் கொள்கிறதாம் தமிழ்ராக்கர்ஸ்!

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனது செயல்பாடுகளை முடித்துக் கொள்கிறதாம். அதிகாரப்பாட்டு அறிவிப்பு.

04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் ராக்கர்ஸ் தனது செயல்பாடுகளை முடித்துக் கொள்வதாக அந்த இணையதளம் அதிகாரப்பாடாக அறிவித்துள்ளது. 

தமிழ் ராக்கர்ஸ் எனும் இணையதளம் திரையரங்குளில் வெளியாகும் திரைப்படங்களை அதிகபட்சம் அன்றைய நாளிலேயே இணையதளத்தில் வெளியிடுவதால் மக்கள் பெரும்பாலும் திரையரங்கிற்குச் செல்லாமலேயே இணையதளத்தில் தரவிறக்கம் செய்து பார்த்து வந்தனர். 

இதனால் திரைத்துறையினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. தமிழ் ராக்கர்சின் இந்த அதிரடிகளுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட எந்த நடிகரும் தப்பவில்லை. இந்த நிலையில் இந்த இணையதளத்தை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த இந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி போயின. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின் போது நடிகர் விசால் திரைத்துறைக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்குவோம் என வாக்குறுதி அளித்து அந்த தலைவர் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். 

ஆனால் பாஜகவின் அடாவடிகளுக்கு நம்மால் எதுவும் சாதிக்க முடியாதது போலவே விசாலின் பதவிக்காலம் முழுவதும் இணையதளத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் விசாலால் முடியவில்லை. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் மிஷ்கின் என பலரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் முடங்கும் என தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக அந்த இணையதளமே அறிவித்துள்ளது. இதற்கான காரணம் என்னவென தெரியவில்லை. இந்த அறிவிப்பால் திரைத்துறையினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படி பாஜகவும் தனது அடாவடிகளை நிறுத்திக் கொள்ளும் என்று நாம் பகல் கனவு கண்டுவிடக் கூடாது. தொடர்ந்து களத்தையே வலுப்படுத்தியாக வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.