பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது பருவத்தில் கலந்துகொண்டு பேரறிமுகமான சம்யுக்தாவுக்கு விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், ராசி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல்பார்வை சுவரொட்டி, வெளியாகி கொண்டாடிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் பிக்பாஸ் பேரறிமுகம் சம்யுக்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தோற்றக்கலைஞரான சம்யுக்தா, துக்ளக் தர்பார் படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.