நடிகர் சிம்புவின் வருங்கால மனைவியைச் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று பேரறிமுக நடிகை பிந்து மாதவி கூறியிருக்கிறார். 02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடிகர் சிம்பு சமையல் செய்யும் காணொளி ஒன்று அண்மையில் சமூகவலைதளங்களில் வெளியாகி விருப்பங்களை அள்ளியது. அதில் சிம்பு, மனைவியை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம். என் மனைவி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன் என்றும் நான் உங்களை மாதிரி அல்ல என்றும் விடிவி கணேசிடம் கூறுகிறார். இந்தக் காணொளியைப் பார்த்துவிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை பிந்து மாதவி, சரியான கொள்கை சிம்பு, நாங்கள் எல்லோரும் அந்தப் பெண்ணைச் சந்திக்க காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



