வேல்முருகனுக்கு வேட்டி கொடுத்தது. ரியோ ராஜின் முகத்திரையை அவரையே கிழிக்க வைத்தது. அனிதாவுடன் சண்டை போட்டது. இப்படி தன்னுடைய சாதனைகளையெல்லாம் வேலைப்போட்டியில் வெல்ல நினைத்து, சுரேஷ் அவிழ்த்து விட்டதையெல்லாம்- பிக்பாஸ்; மற்ற போட்டியாளர்களுக்கு ஒளிபரப்பிக்காட்டி போட்டியாளர்களுக்கு இடையே சிண்டு முடியும் வேலையைச் சிறப்பாக முன்னெடுத்தார். 28,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ‘வெளியேற்ற தப்பிப்பு அனுமதி’ பெற்றிட வேலைப்போட்டி ஒன்றை நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் அறிவித்து போட்டியாளர்களிடம் ஒரு கலக்கத்தை (கலகத்தை) மூட்டினார். பிக்பாஸ் அறிவித்த- பார்வையாளர்களின் வாக்குகளாலும் வெளியேற்ற முடியாதவகைக்கான அந்த ‘வெளியேற்ற தப்பிப்பு அனுமதி’யை தான் பெற்றுவிட வேண்டும் என்று முடிவுசெய்தார் போட்டியாளர் சுரேஷ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ‘வெளியேற்ற தப்பிப்பு அனுமதி’ பெற்றிட, தனி அறையில் எட்டு பேர்கள் கலந்து கொண்ட அந்த வேலைப்போட்டியில், சனம் செட்டி முதல் கேப்ரில்லா வரை தில்லாலங்கடியாகப் பேசிப்பேசியே ஒவ்வொரு போட்டியாளராக வெளியே அனுப்பினார் சுரேஷ் சக்கரவர்த்தி. கடைசியாக அவருடைய அந்தத் திட்டத்தைக் கண்டு பிடித்து விட்டார் முதல் கிழமை தலைவி இரம்யா பாண்டியன். சனம் செட்டி, சிவானி, சம்யுக்தா, ரேகா, கேப்ரில்லா என ஒருத்தர் பின் ஒருவராக திட்டம் போட்டு வெளியேற்றினார் சுரேஷ் சக்கரவர்த்தி. கேப்ரில்லாவை வெளியே அனுப்பும் வரை அவரது விளையாட்டுத் திட்டம் தெரியாமல் இருந்த இரம்யா பாண்டியன், கடைசியாக அவரது நோக்கம் அறிந்து கொண்டு, இதுவரை செம கேடித்தனமாக விளையாடி இருக்கீங்க என்பதை போட்டுடைத்தார். ஆஜீத் சின்ன பையன், அவன் வலுவில்லா போட்டியாளன். நீயும் நானும் சண்டை போடலாம். அவனை வெளியே அனுப்பு என சுரேஷ் வாதம் பண்ண, அதனை இரம்யா ஏற்கவே இல்லை. அஜித்தும் ஏற்கக்கூடாது என்று மிகக்குறைந்த சொற்களைக் கொண்டே வலிமையாக அஜித்தை திறமையாக வளைத்ததுதான் பிக்பாஸ் பார்வையாளர்கள் கைத்தட்டி வரவேற்ற இரம்யா பாண்டியனின் கெத்து ஆகும். சுரேஷ் சக்கரவர்த்தி தான் ஒரு வலுவில்லாத போட்டியாளர் என்றும், அகவை முதிர்ந்தவர் என்றும், எனக்குத் தான் அந்த அனுமதி வேண்டும் என்று குழந்தைத்தனமாகவும் விளையாடிப் பார்த்தார். இரம்யாபாண்டியன் மசியவேயில்லை. பின்னர், வேல்முருகனுக்கு வேட்டி கொடுத்தது. ரியோ ராஜின் முகத்திரையை அவரையே கிழிக்க வைத்தது. அனிதாவுடன் சண்டை போட்டது. இப்படி தன்னுடைய சாதனைகளையெல்லாம் அவிழ்த்து விட்டு அந்த அனுமதி தனக்குத்தான் என்று சுரேஷ் போராடியதை- பிக்பாஸ்; மற்ற போட்டியாளர்களுக்கு ஒளிபரப்பிக்காட்டி போட்டியாளர்களுக்கு இடையே சிண்டு முடியும் வேலையை சிறப்பாக முன்னெடுத்தார். சுரேஷ் சக்கரவர்த்தியின் ஒட்டுமொத்த உண்மை முகமும் அனைத்து போட்டியாளர்களுக்கும் அப்பட்டமாக தெரிய, ஒருவழியாக சுரேஷ் சக்கரவர்த்தி அந்த அறையை விட்டு வெளியேற்றப்பட்டார். கடைசியாக அந்த அறையில் இரம்யாபாண்டியன் அஜித் இருவர் மட்டுமே போட்டிவேலையில் இருந்த நிலையில் அந்த- பிக்பாஸ் நிகழ்ச்சியின் ‘வெளியேற்ற தப்பிப்பு அனுமதி’யை அஜித்துக்கு விட்டுக் கொடுத்து பார்வையாளர்கள் மனதில் இடம்பிடிக்கும் கெத்தை முன்னெடுத்தார் இரம்யா பாண்டியன்.
நான் வெளியேற மாட்டேன் ஆஜீத்தை தான் வெளியே அனுப்ப வேண்டும் என கடைசி வரை போராடினார் சுரேஷ் சக்கரவர்த்தி. அவருடைய சூழ்ச்சித் திட்டத்தை நன்கு புரிந்து கொண்ட இரம்யா பாண்டியன், அதனை ஆஜீத்துக்கும் புரிய வைத்து, சுரேஷ் சக்கரவர்த்தியை அந்த அறையை விட்டு வெளியேற்ற முடிவு செய்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



