நீதான் எனக்கு எல்லாமே, நான் உன்னை மட்டுமே சார்ந்திருக்கிறேன் என்று கூறி கதறியுள்ளார் சித்ரா. ஆனால் சித்ராவின் கதறல்களை காது கொடுத்து கேட்காத ஹேமந்த் செத்து தொலை என்று கூறிவிட்டு சென்றுள்ளார். 01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்ரா மரண வழக்கில் அவரது கணவரான ஹேமந்த் சிக்கியது எப்படி என்பது குறித்து காவல்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் குடும்பப் பாங்காக, சங்ககால இலக்கிய தலைவியைப் போல மென்மையான காதலை வெளிப்படுத்தும் வேடத்தில், பார்வையாளர்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ள நடித்து வந்தவர் நடிகை சித்ரா. இந்நிலையில் கடந்த புதன் கிழமை நசரத் பேட்டையில் உள்ள தனியார் மின்மினி உணவகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா. கணவர் உடன் இருந்த போதே சித்ரா தற்கொலை செய்து கொண்டதும் சித்ரா முகத்தில் காயங்கள் இருந்ததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனால் சித்ராவின் உடலை மீட்ட உடனேயே உடனிருந்த கணவர் ஹேமந்திடம் விசாரணையை தொடங்கினர் காவல்துறையினர். ஆனால் சித்ராவின் உடற்கூறு ஆய்வு அறிக்கை, அவர் தற்கொலைதான் செய்து கெண்டார் என்றும் அவரது முகத்தில் இருந்த காயங்கள் அவருடைய நகக் கீறல்கள் தான் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த் சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியது யார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கினர். இதற்காக சித்ராவின் செல்பேசிக்கு வந்த அழைப்புகள், புலன உரையாடல்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். சித்ராவின் செல்பேசியில் இருந்த சில புகைப்படங்கள் அழிக்கப்பட்டிருந்ததும், மேலும் சில சேதி, அழைப்புப் பதிவு போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. சித்ராவின் கணவரான ஹேமந்த் மற்றும் சித்ராவின் தயாரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ஹேமந்த் அளித்த பதில்கள் அனைத்தும் முன்னுக்கு பின முரணாகவே இருந்தன. சோகமே உருவாக முதல் இரண்டு நாட்கள் விசாரணைக்கு சோகம் சொட்ட சொட்ட காவல் நிலையத்துக்கு வந்துள்ளார் ஹேமந்த். காவல்துறையினரின் கேள்விகளுக்கும் சோகமே உருவாக முகத்தை சோகமாக வைத்துக்கொண்டுதான் பதில் கூறியுள்ளார். ஆனால் மூன்றாவது நாளே அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது முகத்தில் சிரிப்புடன், மனைவி இல்லாத சோகம் கொஞ்சம் கூட இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்துள்ளார் ஹேமந்த். இந்த நடவடிக்கை காவல்துறையினருக்கு ஐயப்பாட்டைக் கிளப்பியுள்ளது. இதையடுத்தே அவரிடம் காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். தொடர்ந்து அவரிடம் 6 நாட்கள் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சித்ரா மரணத்திற்கான காரணம் தற்கொலையே என்று முடிவாகியது. அதன்படி சித்ரா மரண நிகழ்வன்று ஹேமந்துதான், சித்ராவை காரில் அழைத்து வந்ததும், காரில் வரும்போதே உடன் நடிகர்களுடன் இணைத்து ஆபாசமாக பேசியுள்ளார் ஹேமந்த். அறைக்கு வந்தும் சந்தேக சண்டை தொடர்ந்துள்ளது. சித்ராவை ஆபாசமாகவும் கடுமையான சொற்களாலும் தாக்கியுள்ளார் ஹேமந்த். தனது காதல் கணவர் ஆபாசமாக பேசுவதை சற்றும் எதிர்பார்க்காத சித்ரா நீதான் எனக்கு எல்லாமே, நான் உன்னை மட்டுமே சார்ந்திருக்கிறேன் என்று கூறி கதறியுள்ளார். ஆனால் சித்ராவின் கதறல்களை காது கொடுத்து கேட்காத ஹேமந்த் செத்து தொலை என்று கூறிவிட்டு சென்றுள்ளார். தன்னுடைய வன்சொற்களாலேயே சித்ராவை கொன்றுவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல் நடித்த ஹேமந்தின் உண்மை முகம் இறுதியில் அவரை காட்டிக் கொடுத்து விட்டது. முடிவாக காவல்துறை மீட்டெடுத்த தகவல் இதுதான். காவல்துறையினர் ஹேமந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இனி அறங்கூற்றுமன்றத்தில் அவர் என்ன சொல்லப் போகின்றார் என்பதை, சித்ராவைப் பறிகொடுத்த உறவுகளும், உடன் நடிகர்களும், கொண்டாடிகளும் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமே என்று காத்திருக்கின்றனர். குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் பதிவுத்திருமணம் செய்து கொண்ட சித்;;;ரா, கணவன் சந்தேகப் பேர்வழி என்று அறிந்ததும், செத்துத் தொலை என்ற அவனின் கடைசி சொற்களை தனக்கான தீர்ப்பாக எழுதிக் கொண்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



