Show all

ஹிந்து கடவுள், தலைமை அமைச்சரை அவமதிக்கும் வண்ணம் ஓவியக்கண்காட்சி! முடிந்த வழக்கில்: மனு பதிகை தள்ளுபடி

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓவிய கண்காட்சியில் இந்தியத் தலைமைஅமைச்சர் மற்றும் ஹிந்து கடவுள்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் இடம் பெற அனுமதித்த தனியார் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த மாதத்தில் ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் தலைமை அமைச்சர் மற்றும் ஹிந்து கடவுள்களை கேலி செய்து ஓவியங்கள் வைக்கப்பட்டதாக எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மற்றும் ஹிந்து முன்னணி போன்ற அமைப்புகள் குற்றஞ்சாட்டின. 

இதையடுத்து, கல்லூரி நிர்வாகமும் மன்னிப்பு கோரியதால், இதுசம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர் முடிக்கப்பட்டு விட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அறங்கூற்றுவர்கள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு:  

'ஹிந்து-கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தும் வகையில், அவதூறு ஓவியங்கள் வைக்க அனுமதியளித்த சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் மீது குற்ற நடவடிக்கையும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும், 

ஓவியங்கள் வரைந்து கண்காட்சியில் வைத்த ஓவியர்கள் முகிலன் மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கக் வேண்டும்' 

எனக் கோரியும் சென்னையைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர் அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,074.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.