Show all

இணையத்தை ஆளும் 'ஆளப்போறான் தமிழன்' பாடல்! வலையொளியில் பார்த்தவர் எண்ணிக்கை பத்துக்கோடியைத் தாண்டியது

'ஆளப்போறான் தமிழன்' பாடல் வலையொளியில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை பத்துக்கோடியைத் தாண்டியிருக்கிறது.  

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அருள்மிகு தேனாண்டாள் திரை நிறுவனத்தின் நூறாவது படமான மெர்சல் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆளப்போறான் தமிழன்' பாடலுக்கு சமூக வலைதளங்களில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

ஆறு மாதங்களுக்கு முன்பு வெளியாகிய இந்தப் பாடல் வலையொளியில் புதிய சாதனையை படைத்துள்ளது. வலையொளியில்; இதுவரை இந்தப் பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை பத்துக்கோடியைத் தாண்டியிருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில், விவேக் வரிகளில் கைலாஷ் கெர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா இந்த பாடலை பாடியுள்ளனர். தமிழையும், தமிழர்களின் பெருமையையும் சொல்லும் காரணத்தால் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் கெத்து காட்டி வருகிறது. 

அட்லி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் தோற்றங்களுக்கு கதைத்தலைவிகளாக தநித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா பகைவனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,120.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.