கமல் தொகுத்து வழங்கும், விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின், பருவம் நான்கின் போட்டியாளர் வெளியேற்றம் தொடங்கிவிட்டது. 02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கமல் தொகுத்து வழங்கும், விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பருவம் நான்கு பார்க்கும் படியாகவே போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில் அசத்தல் காட்டி உள்ளே வந்த அர்ச்சனா உட்பட பதினேழு போட்டியாளர்கள் உள்ளே இருந்;து கொண்டிருக்கின்றார்கள். நூறு நாட்கள் நடக்கும் இந்தப் போட்டி நிகழ்ச்சியில் ஒவ்வொரு கிழமையும் ஒரு போட்;டியாளரை வெளியேற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த வகைக்கு கடந்த கிழமை வெளியேற்றத்திற்கு நிகழ்ச்சியின் முதல் கிழமை என்பதாக விடுமுறை விட்டு விட்டார்கள். இந்தக் கிழமை வெளியேற்றத்திற்கு பிக்பாசின் வெளியேற்ற நிகழ்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாகும். ஆனால் இந்த முறை முன்னதாகவே இந்தக் கிழமை யார் வெளியேறப் போகின்றார்கள் என்ற கமுக்கம் கசிந்து கருத்துப்படங்கள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தக் கிழமை பிக்பாஸ் வெளியேற்றத்திற்கு இரம்யா பாண்டியன், ஆஜீத், கேப்ரில்லா, சனம் செட்டி, சம்யுக்தா, சிவானி, ரேகா ஆகிய எழுவர் பெயர்கள் முன்மொழியப் பட்டிருந்தன. நேற்றைய நிகழ்ச்சியில் அஜித், சிவானி, இரம்யாபாண்டியன் ஆகியோர் மக்களின் அதிக வாக்குகளால் வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றப் பட்டுள்ளதாக கமல் அறிவித்தார். மீதமுள்ள கேப்ரில்லா, சனம் செட்டி, சம்யுக்தா, ரேகா ஆகிய நால்வரில் பார்வையாளர்களின் குறைந்த வாக்குகள் பெற்றவர்களில் கடைசி ஒருவர் வெளியேற்றப் படவேண்டும். அந்த வெளியேற்ற நிகழ்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாகும். ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேகா வெளியேற்றப்பட இருப்பதாக நேற்றிலிருந்தே கருத்துப்படங்கள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. பிக் பாஸ் தமிழ் முதல் பருவத்தில் நடிகை அனுயா முதல் ஆளாக வெளியேறினார். இரண்டாம் பருவத்தில் மமதி சாரி வெளியேறினார். போன பருவத்தில் நடிகையும் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், நடிகை ரேகா தான் இந்த சீசனில் முதல் ஆளாக வெளியேறுகிறார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



