ஞானம் என்பது தமிழ்ச்சொல் அன்று. ஞானம் என்கிற சொல்லுக்குப் பொருள் தேடும் முயற்சிக்கு, உங்கள் சொந்த உழைப்பில் இருந்து ஒரு ஆதாயத்தை எடுத்து, ஞானம் என்கிற சொல் உருவாக்கத்திற்கு பங்களித்த முதலாவது மொழியினத்திற்குப், புலமைஆதாயமாக கடவுள் பகிரும் என்கிற விழிப்புணர்வைத் தமிழ்மக்களுக்கு ஊட்டுவதற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5127: ஞானம் என்கிற சொல்லுக்கு பொருள் தேடும் முயற்சிக்கு, உங்கள் சொந்த உழைப்பில் இருந்து ஒரு ஆதாயத்தை எடுத்து, ஞானம் என்கிற சொல் உருவாக்கத்திற்கு பங்களித்த முதலாவது மொழியினத்திற்குப், புலமைஆதாயமாக கடவுள் பகிரும். அதனால் ஞானம் என்கிற சொல்குறித்த விரிவான ஆய்வுக்கு என்னை உட்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. ஆனாலும் பேரளவு தமிழ்மக்கள் இந்தச் சொல்லாய்வுக்கு, தங்கள் சொந்த உழைப்பில் இருந்து ஒரு ஆதாயத்தை பல ஆயிரம் ஆண்டுகளாகப் கடவுள் மூலம் இழந்து வருகிறார்கள். ஞானம் என்கிற சொல் கொண்டிருப்பது பேரளவு புனைவுகளை அன்றி உண்மைகளை அல்ல என்பதே உண்மை நிலை. ஞானம் என்கிற சொல்லின் சொந்த இனம்- அந்தச் சொல்லை பிறர் தேடுகிற வகையாக மட்டுமன்றி, அந்தச் சொல்லைத் தேடுகிறவர்கள் பின்பற்றுகிற நிலையில், ஞானம் சொல்லின் சொந்தக்காரர்கள் பேணும் வரிசைப்பாட்டுக்கும் உள்ளாகி, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தடைபடுத்தப்பட்டு, பேரளவு பொருளாதாரத்தையும், உன்னத வாய்ப்புகளையும் இழந்து நிற்கிற அமைப்புக் கட்டமைப்பிலும் ஆதாயம் பார்க்கிறது.. ஞானம் என்கிற இடத்தில் தமிழ்கொண்டிருக்கிற சொல் அறிவு ஆகும். அறிவு என்கிற தலைப்பில், மக்களைத் தமிழ் வகைப்படுத்துகிறதே அன்றி, வரிசைப்படுத்துவது இல்லை. அறிவின் எந்த வகையிலும், யாரும், எப்போது வேண்டுமானாலும் முயன்றால் முடியும் என்கிறது தமிழ். அறிவை விரிவாக்கிக் கொள்வது ஆற்றங்கரை, அல்லது கடற்கரை மணலில் கிணறு தோண்டுகிறது போன்ற எளிய பாங்கினது என்கின்றனர் தமிழ்முன்னோர். அந்தத் தெளிவை திருக்குறள் இப்படிப் பேணியிருக்கிறது. அறிவு என்கிற நீரைப் பெறுவது, ஏதாவதொரு இடத்தில் தோண்டுகிற கிணறு போல அழுத்தம் நிறைந்த மண், பாறைகள், எவ்வளவு தோண்டியும் நிலத்தடி நீர் இன்மை என்கிற அமைப்பு கொண்டது அல்ல. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள்: அறிவை- ஞானம் என்கிற இடுகுறித் தலைப்பாக்கி, அறிவு என்கிற நீரைப்பெறுவது, ஏதாவதொரு இடத்தில் தோண்டுகிற கிணறு போல அழுத்தம் நிறைந்த மண், பாறைகள், எவ்வளவு தோண்டியும் நிலத்தடி நீர் இன்மை என்கிற அமைப்பு கொண்டது என்பதாகச் கட்டமைக்கும் செயற்கை நோக்கத்திற்கு உரியது ஆகும். முட்டாள் மடையன் என்கிற சொற்களில் கூட அறிவுக் குறைவை இயல்பானதாகவோ, இயற்கையானதாகவோ காட்ட முயலவில்லை, தமிழ். முயற்சி இன்மை என்கிற தனிமனிதனின் பாடாற்றல் குறைபாட்டையே பொருளாகப் பொதித்துக் கொண்டுள்ளது தமிழ். ஞானம் தமிழ்ச்சொல் அன்று. ஞானம் என்கிற சொல் கொண்டிருக்கிற அனைத்து பொய்யான புனைவுகளே. பொருள் எதையும் பொதித்துக்கொள்ளாத, காலத்திற்கு காலம் இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள் மாற்றிப் பொருள் விளக்கம் தரும் வகைக்கு, செயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஞானம் என்கிற இடுகுறிச்சொல்லின் மீதான மலைப்பை நிறுத்துங்கள்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,341.